தொலைக்காட்சி டிவியில் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 நடந்து கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3 இல் நிறைய வித்தியாசங்களும் ,மாறுதலும் கொண்டு வருவதன் மூலம் மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்றி உள்ளது. விஜய் டிவி இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கொண்டு வரும் விளம்பரங்களுக்கு அளவே இல்லை என்றும்,எல்லையை மீறி போகின்றது என்றும் ஒரு சில பேர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதேசமயம் இறுதி சுற்றில் வெற்றியாளராக கவின் தான் இருப்பார் என்ற வியப்பில் ஆழ்த்தும் தகவலும் வந்துள்ளது.
இதையும் பாருங்க :
விஜய் டிவியில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி வாரங்களை நெருங்கி சொல்கிறது . இன்னும் 25 நாட்களே உள்ளது, யார்? வின்னர் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களில் பாதிப்பேர் மீது போலீஸ் புகார்களும், வழக்குகளும் உள்ளன. இந்த சீசன் ரொம்ப ஓவராக காதலும், சண்டைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. மதுமிதாவின் தற்கொலை முயற்சி மர்மமான முறையாகவே இன்றுவரை உள்ளது. அதில் ஒரு சில பேர் நாடகங்கள் என்றும் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அது குறித்து சில நாட்களுக்கு முன் மதுமிதா அளித்த பேட்டியில் என்னை அனைவரும் ராகிங் செய்தார்கள், அதனால் தான் நான் இப்படி செய்து கொண்டேன் என்றும் கூறினார்.
இதையும் பாருங்க : ஆல்யா மானஸா, வாணி போஜன் கலந்து கொண்ட ராணி ராணி ஷப்னமின் திருமண வரவேற்பு.! வைரலாகும் புகைப்படங்கள்.!
இதுமட்டுமில்லாமல் கவின் 4 பேரை காதலிக்கிறேன் என்ற சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். இதன் விதமாக சாக்சியுடன் நெருக்கமாக பழகியதுடன் மட்டுமல்லாமல் லாஸ்லியாவுடனும் பழகி வருகிறார்.இதனால் பல பிரச்சனைகள் தொடர்ந்தன.மேலும் சாக்சி வெளியே போனதும் லாஸ்லியாவுக்கும்,கவினுக்கும் சுலபமாகிவிட்டது. இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் லாஸ்லியா அதை பொருட்படுத்தாமல் எனக்கு அவர்கள் காதலித்தது தெரியாது? நான் கவனிக்கவில்லை என்று அலட்சியமாக பதில் கூறினார். மேலும் லாஸ்லியாவின் காதல் கதை தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபமும் ,வருத்தமும் ஏற்பட்டது.
இதுகுறித்து விஜய் டிவியில் வெற்றிகரமாக சில ஆண்டுகளை கடந்தும் ஓடிய ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் இயக்குனர் பிரவீன் மனவேதனையுடன் போட்டி கூறினார். சூப்பர் ஹிட்டாக போய்க்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி சீரியல் திடீரென்று பாதியில் நிறுத்தியதற்கு காரணம் கவின் தான் என்று கூறினார். இதனால் அந்த தொடரில் பணியாற்றிய 40 குடும்பங்கள் அதிக அளவில் பாதித்தன என்று இயக்குனர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
சரவணன் மீனாட்சி சீரியல் தொடரில் கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் கவின். அதன் மூலம் தான் அவருக்கு சினிமா துறையில் இடம் கிடைத்து. திடீரென்று தனக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலை நிறுத்த முடிவெடுத்தார்.இதனால் இயக்குனர்களும், சீரியலின் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் அவருடன் கெஞ்சியும், கோபப்பட்டும் கேட்டுக் கொண்டனர் . ஆனால் நான் உங்களைப் பார்த்தால் என் வாழ்க்கையில் நான் முன்னேற முடியாது, கடைசி வரை இப்படித்தான் இருக்கணும் என்று அலட்சியமாக கொஞ்சம்கூட பொறுப்புணர்வு இல்லாமல் பதில் கூறிவிட்டு சென்றார். இதனால்தான் இந்த சீரியலை நாங்கள் சீக்கிரமாக முடித்தோம் என்று மனக்குமுறல் உடன் இயக்குனர் பிரவீன் கூறினார்.
மேலும் பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்காக இன்னும் என்னென்ன விளம்பரங்கள் கொண்டு வரப் போகிறார்களோ என்று தெரியவில்லை என்று கூறினார். இவை அனைத்தும் டிவியின் பப்ளிசிட்டிகாகவும், வருமானத்திற்காக கொண்டுவரப்படும் நிகழ்ச்சி என்று ஊடகங்களில் பரவி வருகின்றன.