நான் எப்படி வெள்ளையானேனு கேக்குறாங்க.! சரவணன் மீனாட்சி ரஷிதாவின் பதில் இது தான்.!

0
15645
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

-விளம்பரம்-
தினேஷ் - ரச்சிதா

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

- Advertisement -

இந்த நிலையில் தனது கணவர் தினேசுடம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாச்சியார்புரம் ‘ என்ற புதிய தொடரில் நடித்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ரஷிதா தான் எப்படி வெள்ளையாக மாறினேன் என்பதை கூறியுள்ளார்.

தினேஷ் - ரச்சிதா

இதுகுறித்து பேசியுள்ள அவர், பிரிவோம் சந்திப்போம்’ என் கரியரில் மிக முக்கியமான சீரியல். அந்த சீரியலுக்குப் பிறகு இப்போவரைக்கும் நிறைய பேர், `எப்படி கலர் ஆனீங்க’னு கேட்பாங்க. அது மேக்கப் என சிரிச்சிட்டே நகர்ந்து போவேன். அந்த சீரியலில் நடித்தபோது கலராக இருந்தேன். இப்போதான் கருத்துட்டேன். `பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் டைரக்டரே `நீங்க இருந்த சீரியலில் நடிக்கறதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்மா’னு சொல்லியிருக்காங்க. கலரா இருக்கிற பொண்ணுக்கு ப்ளாக் மேக்கப் போட்டு நடிக்க வைக்கிறது கஷ்டம். ஆனால், நான் மூன்று வருஷம் அந்த மேக்கப்போடு இருந்தேன்.’

-விளம்பரம்-
Advertisement