லிங்க பட நடிகையை விளங்கை மாட்டி இழுத்து செல்லும் போலீஸ்.! வைரலாகும் வீடியோ.!

0
2411
sonakshi-sinha

இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி புகார் அளிக்கபட்டுள்ளது.

Image result for sonakshi sinha linga

பாலிவூடில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து வந்த இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “லிங்கா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு  நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். அதன் பின்னர் தமிழில் தலை காட்டவில்லை.

இதையும் பாருங்க : நான் எப்படி வெள்ளையானேனு கேக்குறாங்க.! சரவணன் மீனாட்சி ரஷிதாவின் பதில் இது தான்.! 

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் சோனாக்ஷி மீது
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் சோனாக்ஷி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த புகாரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனாக்ஷி 37 லட்ச ரூபாயை பெற்றுவிட்டு பின்னர் நிகழ்ச்சிக்கு வராமல் பணத்தையும் ஏமாற்றி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனாக்சி சின்ஹாவை போலீசார் கையில் விளங்கு மாட்டி கைது செய்து அழைத்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், அந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்றும் சோனாக்ஷி சின்ஹா விளக்கமளித்துள்ளார். எனவே, மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement