எங்களுக்கு மீண்டும் சரவணன் மீனாட்சி வேண்டும் – ரசிகர் கேட்ட கேள்விக்கு ரஷிதா கொடுத்த பதில்.

0
2351
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. சினிமாவில் தான் நான் முதல் பாகம் இரண்டாம் பாகம் என்று பார்த்திருப்போம். ஆனால், சீரியலில் பல பாகங்களை கண்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த தொடர் மூலம் ரசிகர்களும் பரிட்சயமானவர் நடிகை ரக்ஷிதா.

-விளம்பரம்-

இந்த தொடரில் எத்தனையோ சரவணன் கதாபாத்திரம் மாறினாலும் இறுதி வரை இவர் மட்டுமே மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. மேலும், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு ‘ என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் ரஷிதா.

- Advertisement -

சரவணன் மீனாட்சி தொடருக்காக நடிகை ரஷிதா சிறந்த நடிகை என்ற விருதை பல முறை பெற்றுள்ளார். அந்த வகையில் எத்தனை சரவணன் மீனாட்சி வந்தாலும் நான் தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று விருது மேடையில் கொஞ்சம் திமிராகவே பேசி இருந்தார் ரஷிதா.ஆனால், அதன் பின்னர் விஜய் டிவியின் ஒரு தொடரில் கூட இவரை காண முடியவில்லை.

இந்த நிலையில் ரஷிதாவிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், எங்களுக்கு சரவணன் மீனாட்சி 2 வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு ரஷிதா, இனிமேல் கிடையாது என்று பதில் கொடுத்துள்ளார். இதன் மூலம் சரவணன் மீனாட்சி மீண்டும் துவங்கினாலும் அதில் ரஷிதா கண்டிப்பாக இருக்க மாட்டார் என்பது மட்டும் உறுதி.

-விளம்பரம்-
Advertisement