'சர்தார் 2' படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் 2. ஏற்கனவே சர்தார் முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த ராசி கண்ணா, ரஷியா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், முனீஷ்காந்த், அவினாஷ், யூகி சேது, பாலாஜி சக்திவேல் போன்ற நடித்து வருகிறார்கள். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் சில தினங்களுக்கு முன் தொடங்கியிருந்தது. ஆக்சன் காட்சிகளுடன் இந்த படத்தை இயக்குனர் தொடங்கியிருந்தார். அதனுடைய தொடர்ச்சியாக நேற்று சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது.
சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த சம்பவம்:
அப்போதுதான் ஸ்டன்ட் கலைஞரான ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் தவறி விழுந்து இருந்தார். விழுந்த வேகத்தில் இவருடைய மார்புப் பகுதியில் அடிபட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஏழுமலை வயிறு, தலை உள்ளிட்ட சில இடங்களிலும் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. உடனே அவரை அருகில் இருந்த சூர்யா மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்து இருந்தார்கள்.

ஏழுமலை இறப்பு:
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். இருந்தும் சிகிச்சை பலனின்றி 12 மணி நேரத்திலேயே ஏழுமலை அநியாயமாக உயிரிழந்தார். ஏழுமலைக்கு மார்பு பகுதியில் அடிபட்டு இருந்ததால் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. இவருடைய இறப்பு கார்த்திக்கு உட்பட படக்குழுவினர் பலருக்கும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=AcZvQu6U9ag
போலீஸ் விசாரணை:
இதனால் படப்பிடிப்பு நிறுத்தி விட்டார்கள். மேலும், இறந்த ஏழுமலையின் குடும்பத்தினரை படக்குழு இன்று நேரில் சந்தித்து தங்களின் இரங்கலை தெரிவித்ததோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அவருக்கு 55 வயது தான். தொடர்ந்து அவருடைய உடல் உடற்கூறு ஆய்வுக்காக கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார்த்தி திரைப்பயணம்:
நடிகர் கார்த்தி அவர்கள் ‘பருத்தி வீரன்’ என்ற படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது இவர் நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.






