கலப்பு திருமணம், ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்கள் – சிறுவனின் கதையை கேட்டு கண்ணீர் விட்ட சரிகமப நடுவர்கள்.

0
2046
saregama
- Advertisement -

சரிகமப லிட்டில் செம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளரின் கதையை கேட்டு அபிராமி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி:

பின் இதுவரை 5 பேர் வெளியேறி, தற்போது 23 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். தற்போது இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அசானி என்ற பெண் இலங்கையில் இருந்து வந்த கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அபிராமி செய்து இருக்கும் செயல் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல் சுற்றி நடைபெற இருக்கிறது.

கனிஷ்கர் குறித்த தகவல்:

மேலும், இந்த நிகழ்ச்சியின் கலந்து இருக்க போட்டியாளர்களில் ஒருவர் தான் கனிஷ்கர். இவர் சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர் இந்த வாரம் பக்தி பாடல் சுற்றில் ஜோக்தா அக்பர் படத்தில் இடம்பெற்றுள்ள ஹாஜாவோ ஹாஜா என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடலைக் கேட்டவுடன் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் நடுவர்களும் வியந்து போய் கனிஷ்கரை பாராட்டி இருக்கின்றனர். இதனை அடுத்து கனிஷ்கரின் பெற்றோர்களும் மேடைக்கு வந்திருக்கிறார்கள். அப்போது கனிஷ்கரின் தாய் தங்களுடைய குடும்ப கதையை கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

மதம் மாறி காதல் திருமணம்:

அதில் அவர், நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். எங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நான் மதம் மாறி கனிஷ்கரின் அப்பாவை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் எங்களுடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 17 வருடமாகியும் என் பெற்றோர்கள் பேசவில்லை. இந்த மேடையில் நான் என் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எங்களுடைய வீட்டில் எந்த மதத்தின் கடவுள் படமும் இல்லை.

அபிராமி செய்த செயல்:

அதேபோல் எங்கள் மகன் கனிஷ்கருக்கு கடவுள் இல்லை என்று சொல்லி தான் வளர்க்கிறோம் என்று கண்ணீருடன் மேடையில் பேசியிருக்கிறார். இவரின் கதையை கேட்டு நிகழ்ச்சியில் உள்ள எல்லோருமே கண்கலங்கி விட்டார்கள். பின் நடிகை அபிராமியும் மேடைக்கு வந்து கனிஷ்கரின் அம்மாவை கட்டி தழுவி அவருக்கு ஆறுதல் கூறி அவர்களுக்காக அன்பே சிவம் படத்திலிருந்து யார் யார் சிவன் என்ற பாடலை பாடி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இதுவரை இந்த நிகழ்ச்சியில் அபிராமி பாடிய முதல் பாடல் இது தான். மேலும், இந்த நிகழ்ச்சி இந்த வாரம் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement