நாங்குநேரி சம்பத்துக்கு நான் படம் எடுக்கறது தான் காரணமா ? எஸ்.வி சேகருக்கு பதிலடி கொடுத்த பா.ரஞ்சித்.

0
2660
PARanjith
- Advertisement -

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நாங்குநேரி சம்பவம் தான். ஜாதி வெறியால் மாணவன் ஒருவர் வெட்டப்படட்ட சம்பவம் தமிழ் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித்தும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் ‘சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

ரஞ்சித் போட்ட பதிவு :

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்’ என்று பதிவிட்டு இருந்தார்.

எஸ் வி சேகர் அளித்த பேட்டி :

இந்த நிலையில் இது போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் சினிமாவும் ஒரு காரணம் என்று இயக்குனர் முத்தையா, ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களை கடுமையாக சாடி இருந்தார் நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ் வி சேகர். இதுகுறித்து பேசிய அவர்’ சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்கிறோம். ஆனால், நாங்குநேரியில் ஒரு பள்ளி மாணவனை அவனது வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து வெட்டி இருக்கிறார்கள். சாதியை ஒழிக்கணும் என்று பேசுறோம். ஆனால், பள்ளிக்கூடத்தில் குழந்தையை சேர்க்க போகும் போது என்ன சாதி என்று கேட்கிறார்கள். சின்ன வயதில் அந்தக் குழந்தைக்கு சாதின்னா என்னனு தெரிய தொடங்குது. இதைவிட முக்கியமான காரணம் சினிமா.

-விளம்பரம்-

சினிமாவில் அதிகமாக சாதி படங்களை எடுத்ததால் தான் இந்த வினை. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது இயக்குநர் முத்தையா தான். ‘கொம்பன்’ படத்தை எடுத்து இதை ஆரம்பித்து வைத்தது அவர் தான். அப்புறம் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் என பல இயக்குனர்கள் அதை தொடர்கிறார்கள். தன் சாதியை உயர்த்துவது தப்பு இல்லை. ஆனால், அடுத்த சாதியை தாழ்த்திக் காட்டுவது தான் தப்பு. இன்று சாதி படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்த வெட்டுப்பட்ட மாணவனுக்கு 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கொடுப்பாங்களா? என்று கோபத்தில் கொந்தளித்து பேசி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா ரஞ்சித், எஸ் வி சேகரின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பேசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘

பா. ரஞ்சித் பதிலடி

இது குறித்து பதிலளித்தார் பா. ரஞ்சித் “அந்த மாணவனை வெட்டிய அந்த சிறுவர்கள் பாவம் என்றும் சிறுவர்களிடம் அவருக்கு ஒன்றும் தெரியாது,  அருவவை கொடுத்து வெட்ட சொல்லி இருக்கிறார்கள். நான் படைப்புகள் மூலம் தான் அதை சரிசெய்ய முடியும். நீ இந்த படைப்புகளை மாற்ற கூடாது என்று சொன்னால் நான் அதை பத்தி கவலை படமாட்டேன் .நான் எப்படி பேச வேண்டும் என்று நீ யார் அதை முடிவு செய்ய? இன்னும் எத்தனை காலம் நீ என்னுடைய குரலாக இருப்பேன் என்று என்னை ஏமாற்றி கொண்டு இருக்க போகிறாய்? இது என்னுடைய குரல் எனக்கு வலிக்கிறது நான் தான் பேசமுடியும்.

என்னுடைய  பிரச்சனைகளை பற்றி பேசினால் பேச கூடாது என்று சொல்ல நீ யார் ? நான் அவ்வாறு பேசினால் உனக்கு கோபம் வருதுனா நீதான் முதல் குற்றவாளி. நீ உன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு உன் குற்றத்தை சரி செய்துகொள். உன்னால் ஒரு படைப்பை ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் உன்னை இவ்ளோ காலம் அப்படியே வைத்து இருந்தது? அதனால தான் நீ தற்போது வெடிக்கிறாய். நீ எப்படி பட்ட மன நிலையில் இருக்கிறாய் என்று பார்த்துகொள்.” என்று பா.ரஞ்சித் கூறினார்.     

Advertisement