இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.
இந்த திரைப்படம் திரைக்கு வெளிவந்த நாளில் இருந்து இதுவரை 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.அதே போல வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#ThalapathyVijay becomes the first hero to have two 12CR+ grossers (#Mersal being his first) in Chennai city. #Sarkar 10-days total Chennai gross is 12.23 CR
— Kaushik LM (@LMKMovieManiac) November 16, 2018
இந்நிலையில் சென்னையில் மட்டும் 10 நாட்களில் 12.23 கோடி ரூபாய் வசூல் செய்து இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நடிகர் விஜய் தான் கிங் என்று நிரூபித்துள்ளார்.