சர்கார் பட கிளைமேக்ஸ் இதுதான்..! தளபதிக்கு அம்மாவாக நடித்த துளசி வெளியிட்ட ரகசியம்..!

0
654
vijay

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் “சர்கார்” படத்தில் பிரபல நடிகையான துளசி, நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார். நடிகை துளசி 1967 ஆம் தெலுங்கில் வெளியான “பார்யா ” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்தோடு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

sarkar

- Advertisement -

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை துளசி நீண்ட இடைவேளைக்கு பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான “ஈசன்” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் “பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு “போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது “சர்கார்” படத்தின் மூலம் முதன் முறையாக நடிகர் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளார் நடிகை துளசி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை துளசி “சர்கார்” படத்தில் நடித்த அனுபவத்தையும், படம் குறித்தும் பல சுவாரசியமான தகவலை வெளியிட்டிருந்தார், அந்த பேட்டியில் அவர் பேசுகையில், நான் விஜயை முத்த பையனாகவே தான் எப்போதும் நினைப்பேன், என்னுடைய மகனும் விஜயை அண்ணன் என்று தான் அழைப்பான். விஜயை முதன் முதலில் நான் நேரில் பார்த்த போது விஜிமா என்று தான் அழைத்தேன், அது அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார் துளசி.

-விளம்பரம்-

மேலும் சர்கார் படம் குறித்து பேசிய துளசி, இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நாங்கள் நடித்த போது ரொம்ப வெய்யிலாக இருந்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அற்புதமான வசனம் இருக்கிறது. அந்த காட்சியில் வரும் நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி முடித்து கலக்கிட்டார் விஜய்.

Sarkar

அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அந்த காட்சியில் அவர் பேசியதை பார்க்கும் போது ‘ஐயோ நாம கேட்கவேண்டியதை அனைத்தயும் இவர் கேட்கிறாரே’ என்ற எண்ணம் தோன்றியது. அந்த காட்சி முடிந்ததும் ஒட்டுமொத்த பட குழுவினரும் எழுந்து நின்று கை தட்டினார்கள் என்று கூறியுள்ளார் துளசி.

துளசி பேசியதை வைத்து பார்க்கும் போது கத்தி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வசனத்தை போலவே “சர்கார்” படத்திலும் ஒரு உணர்ச்சி பூர்வமான கிளைமாக்ஸ் காட்சி இருக்கும் என்பதில் மட்டும் உறுதியாக தெரிகிறது.

Advertisement