இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.
சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.
உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து 200 கோடி சாதனை செய்த இரண்டாவது விஜய் படம் என்ற பெருமையையும் பெற்றது. ஆனால், தற்போது கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இந்த படத்தின் வசூல் கணிசமாக குறைந்து வருகிறது.
நேற்றய முன்தினம் சர்கார் திரைப்படம் 32 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் 11.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளாதாம். இன்னும் 15 கோடி வசூல் செய்தால் தான் போட்ட பணத்தையே எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.