அந்த ஒருவரி கதை படம் ஆரம்பித்த நான்காம்நிமிடத்தில் வந்துவிடுகிறது. டிரெயிலரிலேயே வந்தும்விட்டது. எஞ்சியதெல்லாம் ‘சரி, இப்டீன்னா நம்மாள் என்னபண்ணுவார்?” என்று கோத்துக்கோத்து முடையப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் பலவடிவங்கள் யோசிக்கப்பட்டன. முருகதாஸே ஒன்றைச் சொல்லி எல்லாரும் ஆகா என்று சொல்லி மறுநாள் அவரே வந்து சரியாவராது என்று நிராகரிப்பார். ஒரு விஷயம் ‘ஒக்காரலை’ என்றால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே. ‘சார் நம்ம ஹீரோ ஓட்ட கள்ளவோட்டா போட்டிருரானுக…அப்றம்…?” மொத்தத் திரைக்கதையின் நான்கு வெவ்வேறுவடிவங்கள் இப்போதும் என் கைவசம் உள்ளன. சொல்லப்போனால் இன்னும் ஒரு சினிமாவை வசதியாக கைவசம் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கலாம்.
மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜயை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்.சினிமாReading time · 2 min





