இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி திருநாளான நேற்று (நவம்பர் 6)
வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நாடு முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ESP திரையரங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சர்கார் படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று சர்கார் படம் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘பில்லா பாண்டி’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
வெளியான ஒரே நாளில் விஜய் படம் திரையரங்கில் இருந்து எடுக்கப்பட்டதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியிலும், வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பில்லா பாண்டி படம் நல்ல விமர்சனத்தை பெறாதபோதிலும் எதற்காக சர்கார் படத்தை தூக்கிவிட்டு ‘பில்லா பாண்டி’ படத்தை போட்டார்கள் என்பது ரசிகர்களுக்கு மிகபெரிய கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே சர்கார் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியானதில் தாக்கத்தால் ஒரு சில திரையரங்குகளில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.