இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.
#Sarkar is the 8th 200 CR+ WW grosser from the South industry,#Prabhas – Baahubali 1 and 2#Rajinikanth – Enthiran, Kabali#Vijay – Mersal, Sarkar#Vikram – I#RamCharan – Rangasthalam#SuperStar, #RebelStar and #Thalapathy in elite territory..
— Kaushik LM (@LMKMovieManiac) November 12, 2018
இதையடுத்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள் நீக்கபட்டது. இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் சர்கார் படம் திரைப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மூன்றே நாளில் 150 கோடி ரூபாய் வசூல் செய்தது.
வெளியான முதல் நாளில் இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இதன் மூலம் 200 கோடி வசூல் செய்த 8வது தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஏற்கனவே தென்னிந்திய திரைத்துறையில் இருந்து வெளியான. பாகுபலி, எந்திரன், கபாலி,ஐ, மெர்சல் , ரங்கஸ்தலம் போன்ற படங்கள் 200 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.