ஐந்து கண்டங்கள் எட்டு நாடுகள் ..!உலகளவில் சாதனை படைத்த சர்கார்..!

0
2
sarkar
- Advertisement -

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்கார் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் வரும் தீபாவளி அன்று உலக அளவில் வெளியாக இருக்கிறது.

சர்கார் தெலுகு போஸ்டர்:

sarkar

- Advertisement -

இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் சர்க்கார் படம் 200கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படம் அமெரிக்காவில் அக்டோபர் 5 ஆம் தேதியே வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ஓவர் சீஸ் உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த திரைப்படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிட உள்ளனர். அதில் தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் நாடுகளான போலந்து, உக்ரைன், மெச்சிக்கோ, ரஷியா போன்ற நாடுகளை சேர்த்து மொத்தம் ஐந்து கண்டங்கள் எட்டு நாடுகள் சேர்த்து சர்கார் திரைப்படம் வெளியாக உள்ளது.

மொத்தம் 1200 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் சர்கார் திரைப்படம் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இதுவரை தமிழ் படங்கள் அரிதாக வெளியாகும் நாடுகளில் கூட சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

Advertisement