சர்கார் இசை வெளியிட்டு விழாவிற்கு ரஜினி ஏன் வரவில்லை தெரியுமா.? வெளிவந்த காரணம்

0
246
Rajini

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படதின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது.வரும் தீபாவளியன்று படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று (அக்டோபர் 2 ) மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

Sarkar

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுரியில் படு விமர்சியாக கொண்டாடபட்டது. மேலும், இந்த விழாவில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் , நடிகர் விஜய், நடிகைகள் வரலக்ஷ்மி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்குபெற்றிருந்தனர்.

அதே போல இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவார் என்ற சில செய்திகளும் வெளியாகி இருந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் தற்போது “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பதால் நடிகர் ரஜினி இந்து நடக்கும் விழாவிற்கு வருகைதர இருப்பதாக கூறப்பட்டது.

Actor-vijay

ஆனால், இந்த விழாவிற்கு ரஜினி வராதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், ரஜினிக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முறைப்படி அழைப்பு விடுக்காததால் ரஜினி இந்த விழாவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல ரஜினி சார்பில் அவரது பி.ஆர்.ஓ இந்த விழாவிற்கு கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே ரஜினியின் பி.ஆர்.ஓவும் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.