சர்கார் படத்தில் இப்படி ஒரு சர்ச்சை பன்ச் டயலாக் இருக்கா.? அப்போ பிரச்சனை இருக்கு

0
1410
sarkar-movie
சர்க்கார்
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தில் நடிகர் விஜய் பேசும் ஒரு பன்ச் வசனமே வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

கடந்த 21 ஆம் தேதி வெளியான ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் அரசியல் வாதிகளை எதிர்த்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் பேசும் ஒரு பஞ்ச் வசனம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் வில்லனை பார்த்து ‘ஒரு தொகுதியில் தான் நிற்கலாம் என்று இருந்தேன். தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன்’ என்று கூறுவது ஒரு வசனம் இடம் பெற்றுள்ளதாம்.

-விளம்பரம்-

vijay actor

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு விரைவில் வர போகிறார் என்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் அரசல் புரசலாக நிலவி வருகிறது. ஒருவேளை நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தில் இதுபோன்ற அரசியில் கலந்த வசனத்தை பேசி இருந்தால், அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவரது ரசிகர்கள் முடிவு செய்து விடுவார்கள் போல தான் உள்ளது.

Advertisement