14 நாளில் தமிழகத்தில் ‘சர்கார்’ படம் செய்த வசூல் சாதனை..!எத்தனை கோடி தெரியுமா?

0
371
sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த திரைப்படம் திரைக்கு வெளிவந்த நாளில் இருந்து இதுவரை 212 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல வெளி நாடுகளிலும் இந்த படம் மாபெரும் வசூலை ஈட்டி வருகிறது.

தற்போது 3வது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ள ‘சர்கார்’ திரைப்படம், 14 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூலை செய்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சர்கார் திரைப்படம்.