சர்கார் கதை திருட்டு விவகாரம்..!அந்தர் பால்டி அடித்தாரா வருண் ராஜேந்தர் ..!

0
484
SARKAR

இய்குனார் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பரபரப்பாக போய் கொண்டிருந்த இந்த விவகாரத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாசிற்கு பல்வேறு நெருக்கடிகள் வந்தன. இயக்குனர் வருண் ராஜேந்திரன் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த ‘செங்கோல்’ என்ற கதையை திருடி முருகதாஸ் ‘சர்கார்’ படத்தை எடுத்துள்ளார் என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்கபட்டிருந்தது.

- Advertisement -

ஆனால், இயக்குனர் முருகதாஸ் சர்கார் கதை தன்னுடைய சொந்த கதை என்றும் நடிகர் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளதாகவும் தொடர்ந்து கூறிவந்தார்.

இப்படியே இந்த விவகாரம் போய் கொண்டிருக்க தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் பட கதை உரிமை தொடர்பாக கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement