ரங்கன் வாத்தியாரா இது – இளம் வயதில் கர்லிங் முடியுடன் எப்படி இருந்துள்ளார் பாருங்க. அரிய புகைப்படம்.

0
8615
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதில் பசுபதி ஒரு தீவிர தி மு க தொண்டராக நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பிணங்களை தின்னும் அகோரி கொடுத்த மாலை – அதுவும் இது எதனால் செய்யப்பட்டதுனு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது. இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை தைரியமாக தேர்வு செய்துள்ள பசுபதிக்கு பல பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. பசுபதி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நாசர் நடித்த மாயன் படத்தின் மூலம் அறிமுகமான பசுபதி அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் வெயில், விருமாண்டி, அசுரன் போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரை கவர்ந்தது. பசுபதி அறிமுகமான படத்தில் இருந்தே தலையில் கொஞ்சம் முடியில்லாமல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கர்லிங் முடியுடன் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் பசுபதி.

-விளம்பரம்-
Advertisement