விஜய், அஜித் கூட இல்லையாம் இந்த நடிகருடன் நடிப்பது தான் கனவாம் – சார்பட்டா பட நடிகை ஓபன் டால்க்.

0
1708
dushara
- Advertisement -

ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல் இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : இப்படி பண்ணிட்டயே, கண்ணீர் விட்டு கணவரை திட்டி தீர்த்த ஷில்பா ஷெட்டி – அப்படி என்ன அவர் போலீசிடம் சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது.

Sarpatta Parambarai Actress Dushara Vijayan Hot Photo shoot🔥 | Instagram |  Insta Photos🔥🤙 - YouTube

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம் , உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துஷாரா விஜயன் “எனக்கு தனுஷுடன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு” என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை மாளவிகா இது போல சொல்லி தான் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது கூறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement