வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம் – சார்பட்டா பட நாயகி துஷாராவின் உருக்கமான பதிவு.

0
4106
dushara
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர்.இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : ecr ரைட் – கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்த கார், ஒருவர் பலி படுகாயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ள இந்த படத்தின் நாயகி துஷாரா, எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்கு தெரியாது, ஆனா ஜூலை 22, என் வாழ்னாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு. சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால வார்த்தைகலால சொல்ல முடியாத வெற்றி! குடுத்த வேலைய ஒழுங்கா பன்னிருக்கேன்னு ரொம்ப மனசுக்கு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு. மாரியம்மா என் வாழ்க்கைல ரொம்ப சந்தோஷத்த தந்திருக்கா, எல்லாரும் அவள கொண்டாடுரத அவ்வளவு அழகா என்ன ஃபீல் பன்ன வச்சுட்டா.

எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம். அப்படி ஐய்யா நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவாக நடிச்சேன். முதல் பெரிய படம், நீங்க ஒவ்வொருத்தரும் வாழ்த்துகள் சொல்லும்போது ரொம்ப மெய் சிலிர்க்குது, ரொம்ப பயமும் வருது.

-விளம்பரம்-

பெரிய நன்றி எல்லாருக்கும் மாரியம்மாவ சரியான வகைல புரிஞ்சுகிட்டதுக்கு. படத்துல என் கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி மட்டும் சொன்னா பத்தாது. கபிலன் எனக்கு ஒரு பெரிய உருதுணையா இருந்தாரு. படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னு தான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லனும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுரதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்.

Advertisement