ரஞ்சித் 17 முறை கால் செய்தும் எடுக்காமல் இருந்துள்ள சார்பட்டா நடிகை – என்ன காரணம் பாருங்களேன்.

0
5351
dushara
- Advertisement -

ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அதே போல் இந்த படத்தின் இரண்டு நாயகிகள் நடித்து இருந்தனர்.

இதையும் பாருங்க : படப்பிடிப்பில் சேரனுக்கு ஏற்பட்ட விபரீதம், 8 தையல் போடும் அளவிற்கு அடி – ஷாக்கிங் புகைப்படம்.

- Advertisement -

இதில் கலையரசன் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜனை ஏற்கனவே ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பார்த்திறருப்பீர்கள். ஆனால், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், ரஞ்சித் சார் ஆஃபீஸில் இருந்து எனக்கு ஃபோன் வந்தபோது, முதலில் நான் யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்துவிட்டேன். அதன் பின் அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. பிறகு நான் விசாரிக்கையில்தான் தெரிந்தது, மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என்று. நான் உடனடியாக ரஞ்சித் சார் ஆஃபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் ரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக்கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement