டான்சிங் ரோஸ், வேம்புலி, டாடி பத்தி பாத்துடீங்க – வெற்றி பற்றி இந்த ரசிகர் கொடுத்துள்ள detailing பாத்தா அசந்துடுவீங்க.

0
2419
kalai
- Advertisement -

சார்பட்டா படத்தில் வரும் ரங்கன் வாத்தியார்,டாடி,பீடி ராயப்பன்,மாரியம்மான்னு,டான்சிங் ரோஸ்,வேம்புலி,துரைகண்ணு வாத்தியார்,கபிலன்,கபிலனின் நண்பன்னு பலருக்கும் ரைட் அப் வந்துவிட்டது. ஏன் ஆர்யா ஹார்பரில் வேலை செய்யும் சூபர்வைசருக்குப் கூட மீம் போட்டு விட்டாங்க, ஆனா எமக்கு படத்தில் மிகவும் பிடித்த ரங்கன் வாத்தியாரின் மகன் வெற்றிக்கு மட்டும் ஒருத்தரும் ரைட் அப் எழுதல. அதான் நானே எழுதுகிறேன்.பல நண்பர்களிடம் படத்தை பற்றி விவாதித்தபோது வெற்றியின் கேரக்டர் அர்க் சரியில்லை என்றும் வெற்றி கேரக்டர் குழப்பமாய் இருக்கு பேச்சு வந்தது ஆனால் எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது வெற்றி தான்.

-விளம்பரம்-
Pa Ranjith-Arya's 'Sarpatta Parambarai' spell binding characters intro  video is here - Tamil News - IndiaGlitz.com

கலையரசனை படம் முழுக்க இடது கையை ஒருவிதமாய் தூக்கி அடிப்பது போல அழகான உடல்மொழியை கொண்டு வந்து அட்டகாச படுத்தி இருக்கார். வெற்றியின் ஒரே குறிக்கோள் பாக்ஸிங்கில் பெரிய ஆளாக வர வேண்டும் ,தன் தந்தை ரங்கணுக்கு பின், வெற்றி தான் சார்பட்டா பரம்பரையில் தவிர்க்க முடியாதவன் மாற வேண்டும் என்பதே ஆனால் அதை வெற்றியால் சாதிக்க முடியவில்லை.

- Advertisement -

சார்பட்டா படத்தின் ஆரம்பத்தில் வெற்றிக்கும் இடியாப்ப பரம்பரையில் ராஜீவுக்கும் நடக்கும் அந்த இடத்திலே வெற்றி யாருன்னு வசனத்தில் சொல்லி இருப்பாங்க, ” ஒரு அடி அடிச்சதுக்கு எத்தனை அடி அடிக்கிறான் பா வெறி பிடிச்சவன்ப்பா ,யப்பா வெற்றி ஏடாகூடம் பிடிச்சவன்ப்பா சொல்வாங்க” ,இவ்ளோ தான் வெற்றி, அந்த போட்டியில் வெற்றி ஜெயிச்சுட்டு அதுப்பா ரிங் மீது ஏறி வாங்கடான்னு கத்திகிட்டு இருப்பான்.

துரைகண்ணு வாத்தியாரிடம் பந்தயம் கட்டிட்டு வந்ததும் எல்லாரும் வேம்புலிக்கு எதிராக வெற்றி தான் நிறுத்து வாங்கன்னு நினைக்கும்போது ரங்கன் வாத்தியார் ஒரு முக்கியமான வசனம் சொல்லுவார் ” வெற்றி வைக்கிற ஒரு போலோ பன்ச்க்கு நிக்கமாட்டான் வேம்புலி அவ்ளோ ஆக்ரோஷம் அவன் ஆட்டத்தில் இருக்கு,ஆனா என்ன நிதானம் தான் இல்ல குத்துச்சண்டை என்பது தவம் மாதிரி, தொழில் மேல சண்ட செய்யாம, வலு மேலே சண்டை செய்றான் ” என்பார்.

-விளம்பரம்-

வெற்றி தன் ஆசைபட்டதை நடக்கல என்றதும் ராமனை ஸ்பெரிங்க்க்கு கூப்பிடுவார் அங்க கபிலன் அடித்து பேர் வாங்கிடுவார், கபிலனை ஆள் வைத்து அடித்து ரோஸிடம் சண்டைக்கு போக வேண்டாம்னு சொல்லும்போது கூட “நீ இருக்கிறது என் இடம்டா எங்கப்பான்க்கு அப்புறம் நாந்தான் நீ ஏன் டா, வந்த நீ வரலான ராமனை அடிச்சு நா வந்துருப்பேன் சொல்வான்” வேம்புலியின் சண்டையில் தணிகா ஆட்கள் கபிலனின் மானத்தை வாங்கவும், அடிக்க முற்படும்போதும், கபிலனை காப்பாற்றி அவன் கூட தான் நிற்பான் வெற்றி,அதன் பின் கபிலனை உபயோகப்படுத்தி சாராய சாம்ராஜ்யம் பிடிப்பார்.

இங்க பலருக்கு வெற்றியின் கேரக்டரில் இருக்கும் பிரச்சினை வெற்றியின் கேரக்டர் மட்டும் மாறி கொண்டே இருக்கும். ஒரு பக்கம் நல்லவனா நடந்துப்பான் திடீர்ன்னு லூசுதனமும் செய்வான். ஆனால் அப்படித்தான் மனுஷபயலுங்க இருப்பாங்க. ரங்கன் வாத்தியார் கபிலன் வேணாம், குமாரை ரிங்க் மேல் ஏத்துறேன்னு சொல்லும்போது தான் வெற்றி கோவபடுவான் “தம்தா பையன் குமாரே நம்புவே, கபிலனை நம்பமாட்டியான்னு கேட்பான்,கபிலனிடம் நீ துணிஞ்சு இறங்கு டா நா நிக்குறேன் உன் கூட என்பான்.

கபிலன் ராமனிடம் அடிவாங்கி கிட்டு இருக்கும்போது வெற்றி பின்னால் இருந்து அவனே அடியா விடாத யா, அடி யா கத்திகிட்டே இருப்பான் வெற்றி, அவனை அடிச்சு காலி பண்ணுவேனு பார்த்தா,எங்கயா ஓடுறே,ஆனா நா சொல்றே கபிலா தயவு செஞ்சு வேம்புலியோட பாக்ஸிங் ஆட போயிடாத உனக்கு சுத்தமா பாக்ஸிங் வரல ,ஆனா ஒன்னு எங்க அப்பா வாக்கு ,தெய்வ வாக்கு நீ எல்லாத்தையும் தூக்கிபோட்டு வா சாராயத்தில் நிறைய பணம் முடங்கிருக்கு நீ என்கூட வா, சொல்லுபோது கபிலன் அடிக்க கை ஓங்குவான்,நீ அதுக்கு தான் லாயக்குன்னு சொல்லும்போதும், ஊரே ” கபிலன் கபிலன் தூக்கி வெச்சு ஆடுச்சு இப்போ கபிலன் எ கவட்டையில் சுத்திகிட்டு இருக்கான் சொல்லுவான் வெற்றி அப்போ ஏதோ வெற்றி பிளான் பண்ணி செஞ்சே மாதிரி தோணலாம்.

அதே வெற்றி தான் ரங்கன் வாத்தியார் கபிலனுக்கு பாக்ஸிங் வராதுன்னு சொல்லும்போது, வெற்றி கூட நிற்பான், ராமனை ஸ்பேரிங் போட சொல்லுவான் அந்த இடத்தில் பலருக்கு வேணும்ன்னே வெற்றி கபிலனை பலிகொடுக்க நினைக்கிறான்னு தோணலாம். ஆனால் வெற்றி அப்படி நினைக்கிறவன் இல்ல அவன் உணர்ச்சிகளால் ஆட்பட்டவன், அந்த அந்தந்த நேர உணர்வுகளை வெளிக்காட்டும் கேரக்டர் தான் வெற்றி. அதான் படத்தின் இறுதியில் கபிலனை போடவரும் தணிகா ஆட்களை அடிச்சு நீ போ கபிலான்னு,நீ போய் ஆடுன்னு காப்பாற்றுபவன் வெற்றி தான்.இறுதியில் கபிலனின் வெற்றியை கொண்டாடுபவர் வெற்றி தான்.

முகநூல் பதிவு : Sarath Babu

Advertisement