சசிகுமார் இயக்கத்தில் உருவாகும் குற்றப்பரம்பரை படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுப்ரமணியபுரம்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்து இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதோடு இந்த திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்து இருந்தது. அதன் பின்னர் சசிகுமார் அவர்கள் ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் இயக்குவதை விட்டு தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.
சசிகுமார் திரைப்பயணம்:
சமீபத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. தற்போது மட்டுமே வச்ச சிங்கம்டா, .பரமகுரு போன்ற பல படங்களில் சசிகுமார் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் குற்றப்பரம்பரை என்ற நாவலை சசிகுமார் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் தான் குற்றப்பரம்பரை. இந்த நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலை படமாக்க தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயற்சி செய்திருந்தனர்.
குற்றபரம்பரை நாவல் குறித்த சர்ச்சை:
அதனால் இருவருக்குமே இடையே பனிப்போர் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே விமர்சித்து இருந்தார்கள். இந்த பிரச்சனைக்கு பின்னர் இருவருமே குற்றபரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டனர். இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் கூட இந்த படத்தை இயக்குவதாக பேச்சு அடிபட்டிருந்தது. தற்போது குற்றப்பரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களமிறங்கிய இருக்கிறார்.
குற்றபரம்பரை நாவல்:
மேலும், இந்த தொடரின் கதையை வேல ராமமூர்த்தி எழுத இருப்பதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும், 12 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பரம்பரை மூலமாக இயக்குனராக ரீ என்ட்ரி கொடுக்கிறார் சசிகுமார். இது படம் அல்ல, வெப் சீரிஸ் சென்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
படம் தாமதம் ஆவதற்கான காரணம்:
இது தொடர்பாக விசாரித்த போது, குற்றபரம்பரை வெப் சீரிஸ் சீரியஸ் ஆக வரப்போவது உண்மைதான். சண்முக பாண்டியன் இதற்காக அடர்ந்த தாடி, மீசை வளர்த்து வருகிறார். அவருடைய கெட்டப் தான் இன்னும் ரெடியாகவில்லை. இந்த வெப்சைட்சை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் சண்முக பாண்டியன் போலவே நான்கு உயரம் கொண்ட கதாபாத்திரங்கள் இருப்பதால் சத்யராஜ், ராணா போன்ற பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படி சில காரணங்களால் தான் இந்த வெப் சீரிஸ் தொடங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.