பிரம்மாண்ட வரலாற்று படத்தில் விஜய்.! இயக்குனர் இவரா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

0
300

இளைய தளபதி விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கிவரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் அட்லீ படத்திற்கு பிறகு இயக்குனர் சசிகுமாருடன் கைகோர்க்கவிருக்கிறாராம் நடிகர் விஜய்.

sasikumar

இயக்குனர் சசிகுமார், நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கப்போவதாக ஏற்கனவே சில செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அந்த படம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதையை தழுவிய படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மிட் நைட் மசாலாவில் மஹத், யாஷிகா அடித்த கூத்து.! ஆபாசத்தின் உட்சம்.! புகைப்படம் உள்ளே.!

இயக்குனர் சசிகுமார் சில ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் விஜயை சந்தித்து ஒரு கதையை மேலோட்டமாக கூறியதாகவும், அந்த கதை நடிகர் விஜய்க்கு பிடித்து போக நிச்சயம் இந்த கதையை பண்ணலாம் என்று கூறியதாகவும் இயக்குனர் சசிகுமார் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.அதே போல ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜாமௌலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்ரை வைத்து புதியம் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சசிகுமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

raja mouli

மேலும், நடிகர் சசி குமார் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலியை சந்தித்துள்ளார். இயக்குனர் ராஜமௌலி வரலாற்று படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் என்பதால் அவரிடம், சசிகுமார் எடுக்கவிருக்கும் வரலாற்று படத்திற்கு யோசனை கேட்கதான் ராஜமௌலியை சந்தித்துள்ளார் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.