சசி குமார் நடித்துள்ள ‘அயோத்தி’ படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.

0
902
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்துள்ள படம் “அயோத்தி”. இப்படத்தை டிரைன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார். மேலும் சசிகுமார்,பிரியா அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் என பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

கதைக்களம் :

வட இந்தியாவில் அயோத்தியில் இருந்து ஒரு குடும்பம் தீபாவளி அன்று புனித யாத்திரைக்காக குடும்பத்துடன் ராமேஷ்வரம் வருகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு டாக்ஸியில் வரும் போது யஷ்பால் சர்மாவின் பொறுப்பில்லாத தனத்தினால் பெரிய விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் அவரது மனைவி பெரும் காயமடைந்து இறந்து விடுகிறார். இந்நிலையில் மொழி தெரியாத இடத்தில் அந்த தன்னுடைய மனைவியின் ஓடலை போஸ்ட் மாட்டம் செய்யக்கூடாது என சண்டை போடுறார் யஷ்பால் ஷர்மா என்கிற கதாபாத்திரத்தில் இருக்கும் பல்ராம். இந்நிலையில் தற்செயலாக வரும் சசிகுமார் இறந்து போன பல்ராமின் சடலத்தை காசிக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்யும்போது அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அந்த பெண்ணின் உடல் காசிக்கு என்றதால்? இல்லையா? என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

பொதுவாக அடிதடி, சண்டை, அண்ணன் தம்பி பாசம், சொந்தங்களில் துரோகம், நண்பர்களின் துரோகம் என்று இல்லாமல் மூன்றிலும் மாறுபட்ட கதையில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை இந்த படத்தின் மூலம் கொடுத்திருக்கிறது சசிக்குமார், மந்திரமூர்த்தி கூட்டணி. தன்னுடைய மனைவி மரணத்தின் போது கூட பாசமற்ற முரட்டுத்தனமான, கோபக்காரனாக இருக்கிறார் பல்ராம். படத்தின் நாயகனாக வரும் சசிகுமார் நடித்த மிக முக்கியமான சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என சொல்லலாம். அந்த அளவிற்கு கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

அதுவும் தமிழ் படத்தில் ஹிந்தி மொழி பேசும் கதாபாத்திரத்தை படம் முழுவதும் வைத்து இயக்குவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதே போல அவற்றினை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதும் சந்தேகம் தான். ஆனால் கதையின் மீது நம்பிக்கை வைத்து இயக்கிய மந்திரமூர்த்திக்கு பாராட்டுகள். கடத்தல் யஷ்பால் மகளாக வரும் அஸ்ரானி நடிப்பு மிகச்சிறப்பாகவே இருந்தது. கதைக்கும் தேவையானவற்றை கதிதமாகவும் உணர்வு பூர்வமாகவும் நடித்திருந்தார் நடிகை அஸ்ரானி. அது போல புகழ் எப்போதும் போல காமெடி கதாபாத்திரமாக இறக்காமல் சசிகுமாருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின்னணி இசையில் என்.ஆர்.ரகுநந்தன் சிறப்பான இசையையே கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் மாணிக்கம் படத்திற்கு தேவயானவற்றை செய்திருக்கிறார். படம் இரண்டு மணிநேரம் இருந்தாலும் பரபரப்பு குறையாமல் பார்வையாளர்களை திரையயை கவனிக்க வைத்து. படம் நன்றாக இருந்தாலும் ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் ஆங்கிலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. அதன் சமயத்தில் பல்ராம் மகளாக வரும் அஸ்ரானி ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை என்பது கேள்விக்குறிதான். அதே போல பல்ராமின் மனைவி, மற்றும் மகனாக வருபவர்கள் நடிப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சில இடங்களில் சினிமா தன்மை இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை அதனை மறைந்துள்ளது.

குறை :

மேக்கிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பின்னணி இசை ரிப்பீட் மோடில் இருந்ததை குறைத்திருக்கலாம்.

லாஜிக் குறைபாடுகள்.

கிளைமாக்ஸ் காட்சி உணர்வுபூர்வமாக இருந்தாலும் நம்பும் படியாக இல்லை.

நிறை :

சசிகுமார் நடிப்பு பிரமாதம்.

பின்னணி இசையில் கலங்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

கதைக்கரு சூப்பர்.

சொல்லவந்த கருத்து தற்போது உள்ள சூழ்நிலைக்கு மிகவும் தேவையானது. மொத்தத்தில் “அயோத்தி” மதம் கடந்து மனிதத்தை கூறும் ஆயிரத்தில் ஒரு படம்.

Advertisement