டிரெஸ்ஸை அவிழ்க்கச் சொன்னதும் அப்செட் ஆகியுள்ள காவல் அதிகாரி – சாத்தான் குளம் போலீசுக்கு சிறையில் நடந்த விஷயம்.

0
3133
sathankulam

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) இருவரும் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது.

இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த கொலை வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டசப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு அவர்களின் ஆடையை அவிழ்த்து உடல் பரிசோதனை செய்தும், சிறையில் தனிஅறையில் அடைத்தும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் முதலாவதாக கைதான ரகு கணேஷ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அவரது உடலை சிறைக் காவலர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

வழக்கமான நடைமுறைப்படி உடைகளை அவிழ்க்கச் சொல்லி உடலில் காயங்கள் இருக்கிறதா எனப் பரிசோதனை நடந்திருக்கிறது. டிரெஸ்ஸை அவிழ்க்கச் சொன்னதும் சப்-இன்ஸ்பெக்டர் ரகு ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார். உடலில் சோதனை செய்யப்பட்ட பின்னர் ரகு கணேஷ் இடுப்பில் இருந்த அரைஞாண் கயிற்றைக் கழற்றுமாறு சிறைத்துறையினர் சொன்னதும் 1 நிமிடம் அப்படியே நின்றுள்ளார். பிறகு சிறைக் காவலர்கள் நீங்கள் அவிழ்த்து எறியாவிட்டால் நாங்கள் அறுக்க வேண்டியதிருக்கும் என்று சொன்ன பிறகு தான் அவிழ்த்துள்ளார்.

-விளம்பரம்-

கைதான அன்று இரவு முழுவதும் ரகு கணேஷ் தூங்கவே இல்லையாம். பலத்த காயத்துடன் பென்னிக்ஸ் இரவு முழுவதும் கோவில்பட்டி கிளைச் சிறையில் நின்றுகொண்டிருந்ததைப் போலவே எஸ்.ஐ ரகு கணேஷ் தூக்கம் வராமல் நின்றுகொண்டே இருந்திருக்கிறார். பகலில் சரியாகச் சாப்பிடவும் இல்லை என்கிறார்கள் சிறைத்துறையினர். மறுநாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் அதே சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களைப் பார்த்த பிறகே ரகு கணேஷ் முகத்தில் சற்று மலர்ச்சி தெரிந்திருக்கிறது. அதன் பின்னரே சகஜ நிலைக்கு வந்திருக்கிறார். சிறையில் மற்றவர்கள் சரியாகச் சாப்பிடாத நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நன்றாகச் சாப்பிட்டுள்ளார்.

sridhar

மதிய உணவாகச் சாதம் சாம்பாருடன் ஒரு காய் கூட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு கூட்டு மட்டும்தானா என்று கேட்டு உள்ளார் ஸ்ரீதர். மேலும், சிறையில் உள்ள ஒரே பிளாக்கில் நான்கு பேருமே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பிளாக்கில் 12 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் அடைக்கப்பட முடியும். ஆனால், இவர்கள் நான்கு பேரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். காலையில் குளிக்கும்போது, பாத்ரூம் செல்லும்போது மற்றும் உணவுக்குச் செல்லும்போது மட்டுமே நான்கு பேரும் பேசிக் கொள்ள இயலும். இவர்கள் அனைவரையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யான பழனி உத்தரவிட்டிருக்கிறார். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கப்படுவதும் இல்லை. அதனால் நான்கு பேரும் தனித்தனி அறைகளில் அடைந்து கிடக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement