நீங்க கூப்பிட்ட உடனே என்னால வர முடியாது சார் ! இயக்குனரை கெஞ்சவிட்ட நடிகர் சதிஷ்

0
1354
Sathish-actor

தமிழ் படம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கி வருகிறார். தற்போது ஷூட்டிங்கிற்கு அனைவரும் சரியாக வந்துவிட்ட நிலையில் காமெடி நடிகர் சதீஷ் வரவில்லை போலும்.

இதனால், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சதீஸை பதிவு போட்டு அழைத்தார். அதற்கு பதில் அளித்த சதீஷ், அப்படியெல்லாம் உடனே வந்துட முடியாது சார், நிறைய கெட்டப் இருக்கு, ரெடி ஆகிட்டுத்தான் வர முடியும் என்று கூறினார். அதற்கு பதிலளித்த அமுதன்,

இதற்கு ரிப்லை செய்த இயக்குனர் அமுதன், இதுக்கு தான் ஆர்.ஜே பாலாஜியை போட்டுக்கலாம் சொன்னேன் எனக் கூற, அப்டின்நா போய் போட்டுக்கோங்க, நான் போய் வெங்கட் பிரபு படடத்தில் நடிச்சுக்கிறேன் எனக் கூறினார் சதீஷ்.

இந்த நேரத்தில் இடையில் வந்த நடிகர் ஆர்யா, ’12 கெட்டப்புக்கு டைம் ஆகும் பா, இன்னும் கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க வந்துருவாரு’, என கூற , ‘சதீஷ் தம்பி ப்ளீஸ் வாங்க எல்லாரும் வெயிட்டிங் எனக் கூறி சண்டையை முடித்து வைத்தார் இயக்குனர் அமுதன்.