பிகில் பட ட்ரைலரை விமர்சித்த பிரசாத்.. கடுப்பாகி பங்கமாக கலாய்த்த நடிகர்..

0
6525
bigil-prasath
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ‘இளைய தளபதி விஜய்’. மேலும், இயக்குனர் அட்லி அவர்கள் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இதனை தொடர்ந்து நம்ம தளபதி விஜய் அவர்களுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று திரையரங்குக்கு வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும், இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய்யின் ‘பிகில்’ படம் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

-விளம்பரம்-

தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் பிகில் படத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிகில் படத்தின் டிரைலர் இணையங்களில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், பிகில் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வந்தவுடன் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். இது இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ட்ரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது.மேலும், பிகில் படத்தின் ட்ரெய்லர் வந்ததை தொடர்ந்து தியேட்டர்களில் எந்த அளவிற்கு கூட்டம் அலைமோத போகிறதோ? என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பிகில் ட்ரைலரை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலமான நட்சத்திரங்களும் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.விஜய் அவர்களின் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸ்பாஸ் வீட்டில் என்னை நிறைய பேர் காதலிக்கிறேன்னு சொன்னாங்க.. சர்ச்சையை கிளப்பிய மீரா

- Advertisement -

இது இதனை தொடர்ந்து ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களும் பிகில் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு நடிகர் விஜயை பாராட்டியுள்ளார்.இந்நிலையில் கோலிவுட்டில் புதியதாக வரும் படத்திற்கு கருத்துக்களை கூறும் பிரசாந்த் பிகில் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பும், வாழ்த்துக்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனஎன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும்,விஜய் அவர்கள் இந்த படத்தில் வேற லெவல்ல இருக்காரு.அதோடு திரையரங்குகளில் பிகில் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளோம் எனவும் கூறினார்.இதனைத்தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிகில் படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்து கொண்டு இருந்தார்.உடனே நடன இயக்குனர் சதீஷ் பிரசாந்த் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறியுள்ளார்.தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் தான் ட்ரெண்டிங் ஆக போய்க்கொண்டு உள்ளது. அப்படி என்ன தான் சொன்னாங்கனு பார்க்கலாம் .

-விளம்பரம்-

பிரசாந்த் பிகில் படம் குறித்து கருத்து சொல்லிட்டு இருக்கும்போது நடன இயக்குனர் சதீஷ் ‘தள்ளிப்போய் விளையாடுங்க ‘ என்று கூறினார். உடனே பிரசாந்த் அவருடைய கருத்துக்கு ‘நீங்க டான்ஸர் தானே, நீங்க விளையாடுங்க,நான் உட்கார்ந்து பார்க்கிறான் ‘ என்று கிண்டல் செய்தார். உடனே சதீஸுக்கு கோவம் வந்து ‘நல்ல விஷயம் வந்துச்சுன்னா என்ஜாய் பண்ணுங்க உடனே கருத்து கன்றாவி சொல்றேன்னு எழுந்துக்காதிங்க. அப்படி சொல்லனும்ன்னு தோணுச்சுன்னா தள்ளிப்போய் சொல்லுங்க’ என பதிலடி கூறினார். உடனே பிரசாந்த் பொங்கி எழுந்து ‘இதெல்லாம் நீங்க முடிவு எடுக்க கூடாது. நான் அப்படிதான் பேசுவேன். உங்களுக்கு கேக்குறதுக்கு பிடிக்கலைனா நீங்க எழுந்து போங்க’ என்று கூறினார். உடனே சதீஷ்குமார் சிரித்துக்கொண்டு ‘சரி நல்லா கத்தி கத்தி கூவுங்க’ அப்டின்னு ட்விட்டர் பக்கத்தில் இருந்து கூறினார். இதை எல்லாம் பார்த்த தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்கள் ‘ஏன் இப்படி சண்டை போட்டு இருக்கீங்க’ இது சண்டை போடுற நேரம் இல்ல என்று கூறினார்.

இப்படி பிரபலங்களும், ரசிகர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு வெறித்தனமாக போய்க்கொண்டிருக்கிறது பிகில் ட்ரைலர். தளபதி விஜய் அவர்களுக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ளார்கள். மேலும், விஜய் ரசிகர்களுக்காக தீபாவளி கிப்ட்டாக பிகில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் நடிப்பில் வரும் பிகில் படம் தான் இந்த வருடம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர் . மேலும், இது தான் விஜய் ரசிகர்களுக்காக கொடுக்கும் ட்ரீட்டு என்று கூறியுள்ளார். இந்த வருடம் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்களோ? இல்லையோ? ஆனால், விஜய்யின் பிகில் படத்தை வேற லெவல்ல கொண்டாடப் போகிறார்கள் என்று நல்லா தெரியுது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement