பைத்தியம் பிடிச்ச லூசு..! பொணமா நடிக்க சொன்னா செத்துடுவா போல.! வெளுத்துவங்கிய காமெடி நடிகர்

0
237
Aishwarya-Bigg-BOss

காமெடி நடிகரான சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் சதீஷ், சமீபத்தில் ஐஸ்வர்யாவை சப்போர்ட் செய்த இன்ஸ்டாகிராம்வாசி ஒருவருக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா தலைவியான பின்னர் தனிப்பட்ட வன்மத்தை வைத்து தான் பாலாஜி, சென்றாயன்,ரித்விகாவை பழி வாங்குகிறார் என்று பலரும் கூறிவந்தாலும், ஒரு சிலர் ஐஸ்வர்யாவிற்க்கு கொடுத்த டாஸ்க்கை தான் அவர் செய்து வருகிறார் என்று வாய் கூசாமல் கூறி வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் ஐஸ்வர்யா செய்து வரும் செயலை நியாயபடுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டார்.

அந்த பதிவில் ”ஐஸ்வர்யாவின் கம்பீரத்தை பாருங்கள், அவர் ‘சர்வாதிகார ராணி’ என்ற தலைப்பிற்கு கச்சிதமாக இருக்கிறார். ஒரு இரக்கமற்ற ராணி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் இந்த டாஸ்க்கில் சிறப்பாக செய்துளீர்கள் ஐஸ் ‘ என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவிற்கு பல நெகடிவ் கமெண்ட்ஸ் வந்திருந்த நிலையில். இந்த பதிவை பார்த்து காண்டான காமெடி நடிகர் சதீஸ் “ஏன் யா அப்போ பிணமா ஆக்ட் பண்ண சொன்னா உண்மையாவே செத்துருவால ” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

பெரும்பாலானோர் ஐஸ்வர்யா செய்து வரும் அடாவடி தனமான செயலை வெறுத்து வந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் சதீசும் ஐஸ்வர்யா மீது வெறுப்பில் தான் உள்ளார் என்பது அவர் பதிவிட்ட விடயத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் ஐஸ்வர்யா செய்வது சரி தான் என்றும் பாலாஜி அடிக்கடி கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறார் அதனால் அவருக்கு இது தேவை தான் என்றும் ஐஸ்வர்யாவின் செயல்களுக்கு வக்காளத்தும் வாங்கிவருகின்றனர்.