தெறி பட காட்சியை வசனம் கூட மாறாமல் காபி அடித்த சத்யா சீரியல் – வீடியோவை கண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
663
Sathya
- Advertisement -

பொதுவாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் கொரானா தொடங்கிய காலத்திலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்று தான் சத்யா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் சத்யா. இந்த தொடர் காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். மேலும், ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிந்துரா பிந்து’ என்ற ஒடியா மொழித் தொடரின் மறு ஆக்கம் தான் சத்யா சீரியல். இந்த தொடரில் ஆயிஷா மற்றும் விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

சத்யா சீரியல் :

மேலும், ஆண் இயல்பு கொண்ட பெண்ணான சத்யாவின் வாழ்வை மையமாக வைத்து கொண்டது தான் சத்யா சீரியல். இந்த தொடர் ஒளிபரப்புச் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இடையில் திடீரென்று இந்த தொடர் நிறுத்தப்படுவதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்து இருந்தது. இந்த அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் புலம்பித் தள்ளி இருந்தார்கள்.

சத்யா 2 சீரியல் :

பின் மக்கள் பலரும் கேட்டுக் கொண்டதன் காரணமாக இந்த சீரியலின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், நடிகர் விஷ்ணு தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சத்யா 2 சீரியல் குறித்த மீம்ஸ்:

இந்நிலையில் சத்யா 2 சீரியல் குறித்த மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சத்யா சீரியலில் வரும் ஒரு காட்சி அப்படியே இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் வரும் காட்சியை காப்பி அடித்து செய்திருக்கிறார்கள். அதாவது, படத்தில் விஜய் திருடன்களை ரைம்ஸ் சொல்லி அடிப்பார். அதையே தான் சத்யா 2 சீரியலில் சத்யா ரவுடிகளை ரைம்ஸ் சொல்லி அடிக்கிறார். இந்த காட்சி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அட்லீக்கு ஆதரவாக பேசும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த பலரும் மீம்ஸ்களை தெரிக்கவிட்டு கிண்டல் கேலி செய்கிறார்கள். அதிலும் சிலர் ஏன்டா, அட்லி பண்ணா மட்டும் காப்பி காப்பி என்று சொல்லிக்கொண்டே முன்னாடி வருகிற அந்தக் கூட்டம் இப்ப எங்கடா போனீங்க? என்றெல்லாம் அட்லிக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து பேசி இருக்கிறார்கள். இப்படி அட்லிக்கு ஆதரவாகவும், சத்யா 2 சீரியல் குறித்த கிண்டல் கேலி மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement