அவருக்காக தான் ஆயிஷா 3,550 படி ஏறுனாங்க. பல சுவாரஸ்யங்களை பகிர்ந்த குள்ள பூதம் .

0
5471
sathya
- Advertisement -

சமீபகாலமாக சின்னத்திரையில ஒளிபரப்பாகும் தொடர்ல்ல புதுப் புது முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள் சின்னத்திரை இயக்குனர்கள். அந்தவகையில ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் சீரியல்ல “சத்யா” சீரியலும் ஒன்னு. இந்த சீரியல் கல்யாண எபிசோடுக்கு பிறகு தான் செம்மையா போய்ட்டு இருக்கு. சில தினங்களுக்கு முன்பு கூட கானா பாட்டு ஊர்வலம், டான்ஸ் என ஒரே அமர்க்களம்படுத்தியது சத்யா சீரியல். இந்த சீரியலில் விஷ்ணுவும்(பிரபு), ஆயிஷாவும்(சத்யா) ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு பிறகு சீரியலில் முக்கியத்துவம் பெற்ற கேரக்டர் யார்ன்னு பார்த்தால் அது “குள்ள பூதம்” கதாபாத்திரம் இந்திரன் தான். உண்மையிலேயே ஸ்கிரீனுக்கு வெளியே ஆயிஷாவுக்கும், விஸ்ணுவுக்கும் இவர் நெருங்கிய நண்பர். இந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர்கள் நட்பு குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

-விளம்பரம்-
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

- Advertisement -

அதில் அவர் கூறியது, சத்யா– பிரபுவின் திருமணம் எபிசோட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை கொடுத்துச்சி. அதிலும் அந்த நிகழ்ச்சியில கானா பாட்டு, டான்ஸ்ன்னு ஒரே கொண்டாட்டமா எங்களுக்கே இருந்ததுன்னு சொல்லலாம். இதுக்கெல்லாம் காரணம் எங்க இயக்குனர் தான். கான பாட்டு இசை கலைஞர்கள் எல்லாத்தையும் அழைச்சிட்டு வந்து காட்சிகளை பிடித்தார். நானே அந்த அளவுக்கு டான்ஸ் ஆட மாட்டேன். அவங்க பாடிய கானா பாட்டு என்னையே கதிகலங்க வக்கிர அளவுக்கு என்னை ஆட வெச்சது. இந்த திருமண விழா நிகழ்ச்சி காட்சி வலசரவாக்கம் கங்கா நகரில தான் எடுத்தாங்க. இந்த நிகழ்ச்சிய பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதோட இந்த நிகழ்ச்சியை ரொம்ப லைவ் ஆக இருந்தது என்று சொல்லலாம். விஷ்ணுவும், ஆயிஷாவும் எப்படி சீரியல்ல என்னை கிண்டல், கேலி செய்வாங்களோ அதே மாதிரி ரியல் லைபிலும் என்னை அதிகமாக ஓட்டு வாங்க.

இதையும் பாருங்க : அஜித் தம்பி மனசார பேசும். ஆனா, விஜய் கிட்ட பேச ஆசபட்ட போது. மனம் வருந்திய சீனியம்மாள்.

இப்ப தான் ஆயிஷாவுக்கு பிரச்சனை எல்லாம் முடிஞ்சு ஒரு வழியா நிம்மதியாக இருக்காங்க. அதுமட்டுமில்லாம இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கேயாவது போலாம்னு திடீர் திடீர்னு பிளான் போட்டூடுவாங்க. இவங்க போறது இல்லாம எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போயிட்டுவாங்க. அப்படி தான் போன மாதம் திருப்பதி போகலாம்ன்னு வாடான்னு என்னையும் கூட்டிட்டு போயிட்டாங்க. நானும் அவங்கள நம்பி போன. கீழ்த்திருப்பதி வந்த உடனே காரில் இருந்து இறங்கி நடந்து போலன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு பக்கம் பகீர்னு தூக்கி போட்டுருச்சி. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க ரெண்டு பேரும் மேல் திருப்பதிக்கு நடந்தே வரணும்ன்னு வேண்டிக்கிட்டாங்கனு.

-விளம்பரம்-
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

சரி நீங்க வேண்டிகிட்டா என்னை ஏன்டா கூட்டிட்டு போரீங்கன்னு அவங்க கிட்ட கேட்டான். அப்புறம் ஒரு வேற வழியா நட்புக்காக நானும் முழு மனசோடு 3,550 படி நடக்க ஆரம்பிச்சேன். ஆனா, பாதி வழியிலேயே என் உடம்புல இருந்து எல்லா பகுதியும் வெளியே வர மாதிரியே எனக்கு இருந்துச்சி. ஆனா, ஆயிஷா ஜாலியா படி ஏறி வந்தாங்க. படியேற வழியில எல்லாம் ரசிகர்கள் கூட்டம் ஒருபக்கம். எங்கக்கிட்ட செல்பி எடுத்துக் குடுங்கன்னு சொன்னாங்க. அதோட ஆயிஷா தமிழ்ல மட்டும் இல்லாம தெலுங்கு சீரியல்லையும் நடிச்சிட்டு வரதனால தெலுங்கு ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துகிட்டாங்க.

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

ஒரு வழியா அடிச்சி பிடிச்சி மலை ஏறினோம். அப்புறம் ஏண்டா இந்த வேண்டுதலன்னு கேட்டா, சத்யா சீரியல் நல்லா போகும்ன்னு நான் சீக்கிரமா வீடு கட்டி முடிக்கன்னும் வேண்டுனதா விஷ்னு சொல்லறேன். நாலு நாள் வீட்டுல படுத்துட்டே இருந்தேன். எழவே முடியல. அதுமட்டும் இல்லைங்க எங்களுடைய நட்பு ஜாதி, மதம், எல்லாம் தாண்டியது. ஆயிஷா மசூதிக்கு போன நாங்களும் போவோம். நாங்க கோயிலுக்கு போன அவளும் கோயிலுக்கு வருவா. எல்லாத்தையும் தாண்டி விஷ்ணுக்காகத் தான் ஆயிஷா முழு மனசோடு 3,550 படி ஏறுனாங்க. நானும் தான் ஏறுனேன் என்று பல சுவாரசியமான விஷயங்களைப் பேசினார். இஸ்லாமியராக இருந்தாலும் திருப்பதி மலை ஏறிய ஆயிஷாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement