அஜித் தம்பி மனசார பேசும். ஆனா, விஜய் கிட்ட பேச ஆசபட்ட போது. மனம் வருந்திய சீனியம்மாள்.

0
110889
seeneyammal
- Advertisement -

சிட்டுக் குருவி சீனியம்மாள் பாட்டி மதுரையை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 80 வயது ஆகிறது. சீனியம்மாள் பாட்டி அவர்களுடைய ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என அனைவருக்கும் கல்யாணம் செய்து விட்டார். இவருடைய ஒரு மகன் பாண்டியன் என்பவர் தான் சினிமாவில் வேலை செய்கிறார். அப்போது தான் சீனியம்மா பாட்டியை இயக்குனர் சங்கர் பார்த்து உள்ளார். பின்னர் தான் சிவாஜி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த ” சிவாஜி” படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சீனியம்மாள் பாட்டி. ஆனால், பல பேர் இவருக்கு சிவாஜி நடித்தார் என்று தெரியவில்லை. .மேலும், வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் இவர் ஒரு காட்சியில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
சீனி பாட்டி, கமல்

- Advertisement -

மேலும், 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் வெளி வந்த படம் மெர்சல். இந்த படத்தில் சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சீனியம்மாள் பாட்டி. இவர்களுடன் எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் செய்தது. அதோடு இந்த படத்தின் மூலம் சீனியம்மாள் பாட்டி மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து சீனியம்மாள் பாட்டி அவர்கள் 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வந்த ‘விசுவாசம்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும், சீனியம்மாள் பாட்டி சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் மற்றும் அஜித் குறித்து பேசுகையில், என் கூட நடிச்ச அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அஜித் தம்பியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் என்னிடம் தேடி வந்து பேசுவார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சிலர் அஜித் உங்களை விசாரிக்க சொன்னார் என்று சொன்னார்கள். எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை அந்த தம்பி மிகவும் அன்பாக இருக்கும் மனசார பேசும் என்னை பார்த்தாலே அருகில் வந்து உட்கார்ந்து கொள்வா.ர் விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பின் போது நான் விஜய் தம்பி உடன் பேசியது கிடையாது.

-விளம்பரம்-
சீனி பாட்டி

விஜய்யை பார்த்து நான் சிரிப்பேன் உடனே விஜயும் சிரிப்பார். அதோடு எனக்கு விஜய் தம்பி உடன் பேச ஆசையாக இருந்தது. ஆனால், என்னை பேச விடமால் அவருடைய செக்கிருட்டிகள் தடுத்தார்கள் என்று மன வருத்தத்துடன் கூறுகிறார். இந்தப் பதிவை விஜய் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் சீனியம்மாள் பாட்டி வரும் காட்சிகளை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம்.

சீனி பாட்டி, விஜய் சேதுபதி

அந்த அளவுக்கு பாட்டியின் நடிப்பும், நகைச்சுவை பேச்சும் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் நடந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் 500 எபிசோடுகளை கடந்த வெற்றி விழாவில் ‘சிட்டுக் குருவி பாட்டியின்’ கண்ணீர் கலங்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், சிட்டுக் குருவி சீனி பாட்டி அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தலைவர் “168” படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement