ரம்யா நம்பீசனின் குழந்தை கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், குழந்தையை கண்டுபிடிக்க முடியாமையால் அவர் சிபியிடம் உதவி கேட்கிறார்.
சிபிராஜ் எவ்வாறு அந்த குழந்தையை கண்டு பிடிக்கிறார், யார் குழந்தையை கடத்தினார்கள் என்பதுதான் கதை சுருக்கம்.
படத்தில் உள்ள அனைவரும் அருமையாக நடித்துள்ளனர், சிபி ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் அவர்களின் நடிப்பு மிக அருமை. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கூடுதல் பலம். யோகி பாபு சிறிது நேரம் வந்தாலும் தியேட்டரில் கை தட்டல்களை அள்ளிக்கொண்டார். ஆனந்தராஜ் மற்றும் வரலஷ்மி சரத் குமார் காவலர் வேடத்தில் அசத்தி உள்ளனர்.
படத்தின் சுவாரசியத்தை மனதில் கொண்டு விமர்சனைத்தை சுருகிவிட்டேன். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.





