தமிழ் படம்-2 வில் 100வது நாள் படத்தை கலாய்த்த சதிஷ். சத்யராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
80813
sathish
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘ஜெர்ரி’. இதில் ஹீரோவாக ‘ஜித்தன்’ ரமேஷ் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தான் சதீஷ் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘தமிழ்ப் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூட வா, மகான் கணக்கு’ போன்ற சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் சதீஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘மெரினா, எதிர் நீச்சல்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் சதீஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதையும் பாருங்க : சிவகாசி, கற்றது தமிழ் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.

- Advertisement -

‘எதிர் நீச்சல்’ படத்துக்கு பிறகு ‘நய்யாண்டி, மான் கராத்தே, கத்தி, ஆம்பள, தங்க மகன், ரெமோ, பைரவா, கலகலப்பு 2’ என அடுத்தடுத்து பல படங்களில் காமெடியனாக வலம் வந்தார் சதீஷ். 2018-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தமிழ்ப் படம் 2’. இதில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். இந்த படத்தினை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் சதீஷுக்கு பல வித்தியாசமான கெட்டப்புகள் இருந்தது.

இதில் ஒரு கெட்டப் தான் ‘நூறாவது நாள்’ படத்தில் வந்த சத்யராஜின் கெட்டப். ‘நூறாவது நாள்’ என்ற படத்தில் சத்யராஜ் நடித்தது மிகப் பவர்ஃபுல்லான வில்லன் ரோல். தற்போது, சதீஷ் ‘தமிழ்ப் படம் 2’ படத்தில் அந்த கெட்டப் போட்டு நடித்த போது, அவருக்கு மேக்கப் போட்ட மேக்கிங் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகர் சத்யராஜ், சதீஷை பாராட்டி மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

இதையும் பாருங்க : முந்தைய காதல் தோல்விகளுக்கு இதான் காரணம்-மௌனம் களைத்த நயன்தாரா.

-விளம்பரம்-

அந்த மெசேஜை நடிகர் சதீஷ் ட்விட்டரில் ஷேரிட்டு “மிகப் பெரிய விருது சத்யராஜ் சார் அவர்களிடமிருந்து. மிக்க நன்றி சார்” என்று பதிவிட்டிருக்கிறார். தற்போது, சதீஷ் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அதில் குறிப்பாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’. அந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் சதீஷ்.

Advertisement