வடகன்ஸ் மடப்பசங்க, அவனுங்களுக்கு தான் மதப்புயல், ஆனா நமக்கு – தி.மு.க மேடையில் செதறவிட்ட சத்தியராஜ்.

0
152
- Advertisement -

தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் சிறப்பு விழா கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் உடைய பிறந்தநாள் விழா நடைபெற்று இருக்கிறது. இது இவரின் 71 வது பிறந்த நாள். பின் ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி இருந்தார். இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுக தொண்டர்கள் பல நல திட்டங்களை செய்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் மு க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

விழாவில் சத்யராஜ் சொன்னது:

இதில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், வட மாநிலத்திலிருந்து தமிழகத்தை நோக்கி மத புயல் ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. அதை உள்ளே விட வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வட மாநிலத்தை பொருத்துவரை மத புயல் தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான்.

மதப்புயல் குறித்து சொன்னது:

காரணம், இங்கு எல்லா மதங்களை சேர்ந்தவரும் அண்ணன்- தம்பி போல பழகிக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்து மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது. இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக, நண்பர்களாக, குடும்பமாக இருக்கிறோம். இங்கு எப்படி மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும். நாம் படித்து முன்னேறி விடக்கூடாது என்று பல தடைகளை உருவாக்கியவர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறோம்.

-விளம்பரம்-

மத ஒற்றுமை குறித்து சொன்னது:

இன்று தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லோரும் பெரிய அளவில் வந்துவிட்டார்கள். இதுதான் திராவிட மடல் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. சமீபத்தில் நான் ஒரு படப்பிடிப்புக்காக மும்பை சென்று இருந்தேன். அங்கு ஒரு பீப் ஸ்டால் கூட இல்லை. நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்ய அவர்கள் யார்? இது ரொம்ப ஆபத்தானது. இதற்காகத்தான் மத புயல் என்ற மடப்புயல் உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறோம்.

தலைவர்கள் குறித்து சொன்னது:

இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், மதநம்பிக்கை இருப்பவர், மத நம்பிக்கை இல்லாதவர் என அனைத்து பிரிவினருமே ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த ஒற்றுமை சீர்குலைந்து போகக்கூடாது என்பது தமிழர்களுடைய கொள்கை. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஸ்டாலின் வரை என அனைவரும் பெரியார் வழி வந்தவர்கள் தான். நமக்குள் இருப்பது பங்காளி சண்டை தான். அதில் பகையாளி யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement