தன்னை பற்றி தவறாக பேசிய தமிழிசைக்கு தக்க பதிலடி கொடுத்த சத்யராஜ் ! வீடியோ உள்ளே

0
1045
Sathyaraj actor
- Advertisement -

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கம் நடத்திய மௌன போராட்டத்தில் பல்வேறு நடிகர் நடிகைகள் பங்குபெற்றனர்.ஆனால் போராட்டம் முடிந்து மிகவும் ஆவேசமாக பேசிய சத்யராஜின் பேச்சைக் கண்டு பலரும் வியந்துபோயினர் போராட்டம் முடிந்து மேடையில் பேசிய சத்யராஜ் காவேரி மேலாண்மை அமைக்கவும் ,ஸ்டெர்லைட் எதிர்த்தும் நாங்கள் போராடிக்கொண்டே தான் இருப்போம் இதனால் நாங்கள் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என்று மிகவும் ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.சத்யராஜ் கூறிய இந்த கருத்தியக்கு பா. ஜா. காவை சேர்ந்த தமிழிசையிடம் கேள்வி கேட்ட போது சத்யராஜை மிரட்டும் வகையில் வருமான வரி துறை ரைட் நடந்தால் தெரியும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையாடுத்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சத்யராஜ் நான் 40 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகின்றேன் மேலும் எனது வருமான வரியை நான் சரியாகத்தான் செலுத்தி வருகிறேன். இதனால் நான் எதற்கும் பயப்பட தேவையில்லை.மேலும் அதையும் மீறி எனது வீட்டில் வரும்ன்னு வரி ரைட் நடத்தினாலும் ஒன்றும் கிடைக்கப்போவதில் லை என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.

மேலும் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எப்போதும் இருந்தது இல்லை தமிழகத்து ஒரு பிரச்சனை என்றால் நான் கண்டிப்பாக குரல் கொடுத்து முன் நிற்பேன். ஆனால் என்னை பார்த்து ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. மேலும் மாபெரும் தலைவர்கள் படங்களில் அப்பா வேடத்தில் நடித்து வரும் என்னை பார்த்து பயப்பட வேண்டிய ஆவசியமும் இல்லை என்று மிகவும் கேலிக்கையாக பதிலைத்துள்ளார் நடிகர் சத்யராஜ்.

-விளம்பரம்-
Advertisement