பாலா அணிந்திருக்கும் மாலைக்கு பின்னால் 100 பிணங்களின் கதை இருக்கா ? மிரளவைக்கும் பின்னனி.

0
25576
bala
- Advertisement -

சினிமா படம் துவங்கிய காலத்திலிருந்தே தமிழ் சினிமாவுக்கு என ஒரு சென்டிமென்ட் வைத்து உள்ளார்கள். அது படம் துவங்கும் போது ‘நல்ல வசனங்களை பேசியும், சாமி புகைப்படங்களை’ காண்பித்து தான் மங்களகரமாக ஆரம்பிப்பார்கள். ஆனால், அதை எல்லாம் உடை தெரிந்தவர் இயக்குனர் பாலா. இவருடைய படங்களில் எல்லாமே துவக்கத்தில் சுடுகாடு, பிணம், அகோரிகள், ரத்தம், கொலை, அபசகுனங்கள் போன்ற எதிர்மறையான விஷயங்களை தான் காட்டுவார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துவார். இதனாலேயே இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர் ஆனார் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
Bala

- Advertisement -

பொதுவாக படம் என்றாலே ஆக்ஷன், காதல், ரொமான்டிக் என எல்லாம் இருக்கும். ஆனால், இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என வித்தியாசமான கோணத்தில் தான் இருக்கும். மேலும், இவர் பாடலுக்காக படம் இல்லை, படத்தில் ஒன்று,இரண்டு பாடல்கள் இருந்தால் இருந்தால் போதும் என்ற சினிமாவின் விதிமுறைகளை மாற்றியவர். பாலா அவர்கள் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தின் மூலம் தான் முதன் முதலாக இயக்குனர் ஆனார். இவருடைய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர். அதுமட்டுமில்லாமல் விக்ரமை இந்த அளவிற்கு உருவாக்கியவரும் இயக்குனர் பாலா தான்.

இதையும் பாருங்க : முதன் முறையாக நீச்சல் உடையில் ஸ்வாதி. ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ.

மேலும், பாலா படத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அப்படி பேரும் புகழும் வாங்கிய பாலாவுக்கு தற்போது ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டது. அது வர்மா படத்தின் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த படம் “அர்ஜுன் ரெட்டி”. இந்த படம் பிளாக் பஸ்டர் அளவுக்கு பெரிய அளவு ஹிட் கொடுத்தது. இந்த படத்தை தான் தமிழில் இயக்குனர் பாலா அவர்கள் விக்ரமின் மகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்தார். மேலும், அந்த படத்திற்கு “வர்மா” என்றும் பெயர் வைத்தார். படமும் ஓரளவு எடுத்து முடிந்தது. படத்தை பார்த்த தயாரிப்பாளர் இதை வெளியிட்டால் படம் ஓடாது, நஷ்டம் ஆகி விடும் என்று பாலாவின் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்.

-விளம்பரம்-

பின் விக்ரம் ஆவது இந்த படத்திற்கு பாலாவிற்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், அவரும் செய்யவில்லை. ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் புது இயக்குனரை வைத்து படம் இயக்கினார் நடிகர் விக்ரம். அந்த படத்திற்கான பணத்தையும் அவரே செய்தார். இயக்குனர் பாலா மனம் நொந்து போகும் அளவிற்கு முடங்கிப் போய் இருந்தார். அடுத்து படங்கள் கிடைக்காததால் மனம் வெறுத்துப்போய் காசிக்கு சென்றார். நான் கடவுள் படத்தின் போது இவருக்கு நிறைய அகோரிகள் நட்பு கிடைத்தது. அவர்களிடம் தன் மன அழுத்தங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் அகோரி ஒருவர் பாலாவுக்கு எலும்பு மாலையை பரிசாக அவர் கழுத்தில் அணிவித்தார். அந்த எலும்பு மாலை நூறு பிணங்களின் முதுகெலும்பிலிருந்து எடுத்து சிறு எலும்புகளாக உருவாக்கப்பட்ட மாலையாக இருந்தது.

Image result for இயக்குனர் பாலா

இந்த மாலையை போட்டுக் கொண்ட பின் பாலாவின் நடவடிக்கைகளில் பயங்கர மாற்றம் தெரிகிறது என்று கூறுகிறார்கள். சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலாவிற்கு துரோகம் செய்தவர்களை கடுமையாக பேசி வந்து உள்ளார். முன்பெல்லாம் தன்னுடைய எதிரிகளை கூட மன்னித்து வரும் பாலா இப்போதெல்லாம் அவர்களுக்கு சாபமிட தொடங்கிவிட்டார். பாலா அவர்கள் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்திற்கு பெரும் சாபம் விட்டு திட்டி தீர்த்தார். அதன் விளைவு படம் பேரளவு அடி வாங்கியது. இந்த படத்தினால் எட்டு கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து விக்ரம் அவர்கள் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். பாலா கழுத்தில் இருக்கும் எலும்பு மாலையை பார்த்து பல சினிமா பிரபலங்கள் மிரண்டு வருகின்றார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த செய்திகள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று தான் தெரியவில்லை.

Advertisement