கமல் 5 வயசுல இருந்து சினிமால இருக்கார், அவருக்கு எவ்ளோ ரசிகர்கள் அவராலே வர முடியல, விஜய் எல்லாம் – சீமான்.

0
609
seeman
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும், தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பயங்கரமாக ஆயுதமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இது குறித்து கூட விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் பிரிவில் இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. முதல் தேர்தலிலேயே சிக்ஸர் அடித்ததால் விஜய்யும் மகிழ்ச்சியில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார் விஜய். விஜய் உடைய புகைப்படத்தையும், கொடியை வைத்தே தேர்தலில் வெற்றியடைந்த நிலையில் விஜய்யே போட்டியிட்டால் நிச்சயம் காலங்காலமாக இருக்கும் அரசியல் கதிகலங்கி விடும் என்று கூறப்படுகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது.

- Advertisement -

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:

வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டியிட இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த வாரம் தான் தேர்தலில் போட்டியிட அணைத்து கட்சி உறுப்பினர்களும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இப்படி தீவிரமாக அனைத்துக் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம்:

அதில் அவரிடம் விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சீமான் கூறியிருப்பது, விஜய் என்னுடைய தம்பி. கோட்பாடு அளவில் நான் வேறு. அவர் வேறு. என்னுடைய தலைவர் பிரபாகரன். அவரைப் பற்றி விஜய் பேசுவாரா? என் நிலத்தை காப்பாற்ற நான் துடிக்கிறேன். ஆற்று மணலை விற்பனை செய்வதை கண்டித்து இருக்கிறார்களா? நீரை உறிஞ்சி விற்பதை கூடாது என்றிருக்கிறீர்களா? அவருடைய கோட்பாடு என்னவென்று தெரியாமல் அவருக்கும் எனக்கும் போட்டி என்று எப்படி நீங்கள் சொல்வீர்கள்?

-விளம்பரம்-

சீமான் அளித்த பேட்டி:

பாரதிய ஜனதா உட்பட இந்தியாவை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி எதிர்த்து நான் போட்டுவிட்டு வருகிறேன். ஒரு நடிகராக எம்ஜிஆர் வென்றதற்கு காரணங்கள் இருக்கிறது. பெரியார், அண்ணா, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட தலைவர்கள் சாதித்து சென்றார்கள். அந்த இடம் காலியாகி விட்டது. கருணாநிதி மட்டும் தான் ஆட்சியில் இருந்தார். அவரை எதிர்க்க வலிமையான ஆற்றல் தேவைப்படுகிறது. எம்ஜிஆருக்கு முதலில் அரசியலில் இறங்க தயக்கம் இருந்தது. பின் ரசிகர்கள் கொடுத்த நம்பிக்கையால் தான் அவர் அரசியலில் இறங்கினார். ஒரே தேர்தலில் வென்று ஆட்சியை அமைக்கும் வரலாறு இனி சாத்தியமில்லை.

விஜய் பற்றி சீமான் கூறியது:

இதைவிட புகழ்பெற்ற நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண் எல்லாம் அரசியலில் தாக்கு பிடிக்க முடியாமல் சென்று விட்டார்கள். எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் மட்டும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். சொல்லப்போனால் அரசியல் வேறு, விதி வேறு. கமலஹாசன் 5 வயதிலிருந்து சினிமா துறையில் இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரால் அரசியலில் நிலைக்க முடியவில்லை. இதை எல்லாம் தெரிந்துதான் ரஜினிகாந்தும் அரசியலை விட்டு விலகி விட்டார். என் தம்பி வந்தாலும் அவர் என்ன கோட்பாட்டை வைத்திருக்கிறார் என்பது தான் முக்கியம் என்று கூறி இருந்தார். இப்படி சீமான் பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement