அவர் பிரச்சனைக்கு கூட நான் தான் போய் மல்லு கட்ட வேண்டி இருக்கு – விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

0
480
seeman
- Advertisement -

சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இல்லை என்று சீமான் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். இவர் அரசியல் மட்டுமில்லாமல் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சீமான் அவர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று கொண்டிருந்தார். அந்தப் பேட்டியில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் வழக்கம்போல் சீமான் விஜய்யை சீண்டிப்பார்த்து உள்ளார். மேலும், பேட்டியில் சீமானிடம் முல்லைப் பெரியாறு பற்றி பேச நடிகர் தமிழ் நடிகர் இல்லை? என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்களே அதற்கான முன்வாதத்தை வைக்கலாமே? என்று கேட்டார்கள். உடனே சீமான் அவர்கள் கூறியது, என்கூட நடிக்கவே எல்லோரும் பயப்படுகிறார்கள்.

-விளம்பரம்-
Seeman Supports Surya : சூர்யாவின் தைரியத்தை பாராட்டிய சீமான்-வீடியோ -  Filmibeat Tamil

திடீரென்று வருமான வரி சோதனை போடுகிறார்கள். எனக்கு என் படத்திற்கு தியேட்டர் கொடுக்கக்கூட பயப்படுகிறார்கள் படம் தயாரிக்க பயப்படுறாங்க அதுமட்டுமில்லாமல் என்னுடன் கூட நடிக்கிறதுக்கு ஏன் அவருடன் நடிக்கிறாய்? என்று கேள்வி கேட்கிறார்கள். ஏனென்றால் நான் எல்லாரையும் எதிர்க்கிறேன். இது தான் என்னுடைய பிரச்சனை. மேலும், பண பாதுகாப்பு பற்றி கார்த்திக் மட்டும் தான் குரல் கொடுத்தார். அதே போல் கல்விக் கொள்கை பற்றி தம்பி சூர்யா மட்டும் தான் குரல் கொடுக்கிறார். அதற்கு எவ்வளவு எதிர்ப்பு என எல்லோருக்குமே தெரியும். நான் சூர்யாவின் ஜெய் படம் பார்த்தேன். இயக்குனர் ரொம்ப திறமையாக எடுத்திருக்கிறார். இந்த படத்தை எடுப்பதற்கு உண்மையாலுமே துணிவு வேண்டும்.

இதையும் பாருங்க : ‘அண்ணாத்த’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சங்கள் – சினிமா ரிவியூவர்களை விளாசும் சிவா.

- Advertisement -

தமிழில் இப்படி ஒரு படம் வெளிவருவது பெருமையாக இருக்கிறது. சூர்யா தவிர வேறு யாரும் இப்படி எல்லாம் முயற்சி செய்வார்களா? என்பது சந்தேகம் தான். சூர்யா தவிர மற்ற நடிகர்களுக்கு யாருக்கும் தைரியம் இல்லை. விஜய் துணிந்து பேசணும். அவர் உயரம் அவருக்கே தெரியாது. விஜய் பயப்படுகிறார். ஏன் பயம்? இது உன் நாடு, உன் மக்கள். அவர்களுக்கு தானே பேசப்போற. அவர் பிரச்சனைக்கு கூட நான் தான் போய் மல்லு கட்ட வேண்டி இருக்கு. எதற்கு பயப்படனும் என்று சீமான் கூறி உள்ளார். இப்படி சீமான் பேசியதை கேட்டு விஜய் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளார்கள். மேலும், விஜய் பற்றி சீமான் விமர்சிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆரம்ப காலத்திலிருந்து இப்போது வரை விஜய் பற்றி இவர் பலவிதமாக விமர்சித்து வருகிறார்.

ஒரு வேளை விஜய் அரசியலுக்கு வந்தால் அது நிச்சயமாக தனது எதிர்காலத்தை பாதிக்கும் என்று பயந்து தான் சீமான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது. அதோடு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. இந்த கோபத்தில் தான் விஜய் பற்றி பேசுகிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்து விஜய் ரசிகர்களிடம் இருந்து எந்த விதமான எதிர்வினை வருகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement