சினிமா ரிவியூவர்களை வெளுத்து வாங்கிய அண்ணாத்த சிவா. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியான முதல் நாளன்றே கோடிக்கணக்கில் வசூல் செய்தது. படத்தில் குடும்ப உறவுகளின் மதிப்பையும், அண்ணன் தங்கை பாசத்தையும் அழகாக கூறி இருந்தார் இயக்குனர் சிவா. மேலும், அண்ணாத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் சில சினிமா ரிவியூவர்கள் படம் குறித்து தேவை இல்லாமல் விமர்சித்து இருந்தார்கள்.
இதுகுறித்து தற்போது சிவா அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உலகத்தில் உண்மை, நேர்மை, அழகு என எவ்வளவோ பாசிட்டிவான விஷயங்கள் இருக்கின்றது. அந்த அளவிற்கு உலகத்தில் நெகட்டிவான விஷயங்களும் இருக்கத் தான் செய்யும். ஆனால், அதைக் கண்டு கொள்ளவோ கூடாது என்பதில் நான் தெளிவாக உள்ளேன். நான் எப்போதும் திரைப்பட விமர்சனங்களை பார்ப்பது கிடையாது. ஒரு படத்தை படைத்தவனுக்கும் அதனைப் பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கும் இடையே நேரடி கனெக்சன் இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். ஆனால், இடையில் சினிமா ரிவியூவர் என்ற போர்வையில் அவருடைய எண்ணங்கள், பார்வைகள் அந்த படத்தின் மீது பட்டு ரசிகர்கள் இடம் செல்கிறது.
இது சரியில்லை. பொதுவாக நான் ஒரு படம் பார்க்கிறேன் என்றால் நேரடியாக படத்தை பார்ப்பேன். படம் பிடித்து இருந்தால் சந்தோசம், பிடிக்காவிட்டால் அந்த இயக்குனர் வேறொரு நல்ல படத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செல்வேன். அதற்காக நான் ரிவியூ பார்த்து படம் பார்ப்பதில்லை. அதிலும் எவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் அதற்கு நெகட்டிவான விமர்சனம் சொல்வதற்கு என்று ஒரு கும்பல் இருந்து கொண்டிருக்கின்றது. தவறான விமர்சனங்கள், தனி மனித தாக்குதல்கள் ஆகியவற்றால் பல பேருடைய உழைப்பு வீணாகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையான உழைப்பு, நேர்மை, இறைவன் அருள் எல்லாம் ஜெயிக்கும்.
இதெல்லாம் ரசிகர்கள் தான் பார்த்துக்கொண்டு முடிவு செய்ய வேண்டும். நான் எப்போதும் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு தலைவணங்குகிறேன். பொதுவாகவே மக்கள் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால் அதை சொல்ல கூடாது என்பதற்காகவே சினிமா ரிவியூவர்கள் நல்லா இல்லை என்று ஏதாவது ஒரு குறை சொல்வார்கள். இது போன்ற விஷயங்களை நான் எடுத்துக்கொள்வது இல்லை. பொதுமக்களும் ரசிகர்களுக்கும் சந்தோஷமாக, சிரித்து மகிழ கூடிய படங்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். இதுதான் என்னுடைய ஆசை. அதை நான் தொடர்ந்து செய்வேன் என்று கூறி இருந்தார்.