“ரக்ஷா பந்தனை தவிர மற்ற பண்டிகைகள் எல்லாம் அவர்களுக்கு பண்டிகை  இல்லையா? மத்திய அரசை விமர்சித்த சீமான்.

0
858
- Advertisement -

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இது குறித்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-

சீமான் கூறியது:   

“ரக்ஷா பந்தனை தவிர மற்ற பண்டிகைகளும் அவர்களுக்கு பண்டிகை  இல்லையா? தீபாவளி பொங்கல் என்னும் அவர்களுக்கு பண்டிகை இல்லையா? 1200 சிலிண்டர் விலை ஏற்றி விட்டு திடீரென்று விலையை குறைப்பது என்றால் அது தேர்வுதலுக்காக தான். நாம் அதையே மறந்து மீண்டும் ஒரு ஓட்டு போட்டு அவரை கொண்டு வந்தது என்றால் மீண்டும் அது 2000 ரூபாய் ஆக மாறிவிடும்.

- Advertisement -

இவ்வளவு நாட்களாக எண்ணெய் நிறுவனத்தின் பொறுப்பு என்று கூறிவந்த நிலையில் இப்போது உங்களால் எப்படி விலை குறைக்க முடிகிறது. ஆக உங்களால் விலையை குறைக்க முடிகிறது. மக்கள் இவ்வளவு நாட்கள் கஷ்டத்தில் சிரமத்தில் இருந்தால் என்பது தெரிகிறது உங்களுக்கு. இவ்வளவு நாள் மக்களை துன்புறுத்ததற்கு யார் பொறுப்பு ஏற்பது.  அரிசி விலை ஏறி உள்ளது பருப்பு விலை ஏறி உள்ளது என்ன விலை எறிகிறது பால் விலை ஏறி வருகிறது.

கடைசியில் எல்லாம் விளையும் எறுகிறது. எல்லாம் ஏறிகிறது நாங்கள் வாழ்வது வேண்டாமா இங்கே. இது எல்லாம் மக்களின் மீது அக்கறை உள்ள அரசு இதுபோன்று சிந்திக்காது. தேர்தல் என்பது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது அதில் மூன்று ஆட்சியை பிடிப்பவர்கள் அந்த ஐந்து வருடத்தில் மக்களைப் பற்றிய சிந்திக்க வேண்டும். கல்வி மேம்பாடு மருத்துவ மேம்பாடு  மின்சாரம் விநியோகம் பாதை போடுதல் பராமரித்தல் குடிநீர் வினியோகம், கல்வி கல்வி ஏற்ற வேலை, தொழில் வளர்ச்சி முன்னேற்றம், இதை நோக்கித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

எப்போதும் அடுத்த தேர்தலில் குறி வைத்துப் போகிறீர்களே.  தாங்கள் கேட்டுப் போராடிய பொழுது ஏன் விலையை குறைக்கவில்லை. இதனை சர்வாதிகார ஆட்சி என்று சொல்ல முடியாது இதை கொடுங்கோன்மை என்று தான் சொல்ல வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் அவரும் ஒரு சர்வதிகாரி தான். தன்னாலம் அற்ற அன்பான சர்வதிகாரி. மக்கள் நலன் சார்ந்த சிந்தித்தார்கள் செயல்பட்டு வந்தார்கள்.

Advertisement