‘ஒரு மாதிரி இருக்கும்’ – லெஸ்பியன் குறித்த கேள்விக்கு ஓபனாக பதிலளித்த ஓவியா.

0
1670
oviya
- Advertisement -

லெஸ்பியன் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகை ஓவியா கொடுத்திருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தான் ஓவியா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Oviya

ஆனால், இவருக்கோ பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு பின்னர் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா:

இந்த சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்தது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்ற ஆர்மியே இவரால் தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்தது. இதற்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டானார்.

ஓவியா திரைப்பயணம்:

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஓவியா. இந்த நிலையில் லெஸ்பியன் குறித்த சர்ச்சைக்கு நடிகை ஓவியா கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியில் திருமணம் குறித்து ஓவியாவிடம் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஓவியா அளித்த பேட்டி:

அதற்கு ஓவியா, நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். கடைசி வரை நான் நடித்து கொண்டு இருந்தால் மட்டும் போதும். யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். இதை பார்த்த பலருமே ஓவியாவின் பதிலை குறித்து பல சர்ச்சைகளை எழுப்பி இருந்தார்கள். அதில் சிலர், நீங்கள் தன் பாலின ஈர்ப்பாளரா? என்று கேட்டிருந்தார்கள்.

oviya

லெஸ்பியன் குறித்து சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் இது தொடர்பாக பேட்டியில் ஓவியாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஓவியா கூறி இருப்பது, இது போன்ற கமெண்ட்களை நான் பார்த்திருக்கிறேன். அதை பார்க்கும்போது ஒரு மாதிரியாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். நான் லெஸ்பியன் கிடையாது. எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement