லைகா தயாரிப்பில் சீமான் இயக்கப்போகும் படம். ஹீரோ யார் தெரியுமா?

0
1752
seeman

விஜய்யை வைத்து சீமான் இயக்கப்போவதாகச் சொல்லிவந்த ‘பகலவன்’ திரைப்படம், விஜய் ஆண்டனியின் கைக்கு மாறியதாகத் தகவல்கள் முன்னரே வந்தன. தற்போது, அந்தப் படத்தின் அடுத்த அப்டேட்ஸ் வரத் தொடங்கியுள்ளன.

vijay antonyசீமான் – விஜய் ஆண்டனி இணையும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறதாம். விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’, ‘காளி’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். 2008-ம் ஆண்டு மாதவனை வைத்து சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்துக்குப் பிறகு, சீமான் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. அவ்வப்போது சில படங்களில் நடிக்க மட்டும் செய்தார். அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் சீமான், தற்போது மீண்டும் படங்கள் இயக்கவருவது அவரது தம்பிகளுக்கு ஆனந்தமாக இருக்கலாம்.