நாம் தமிழர் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி, விஷால் போன்ற தமிழரரல்லாதவர்கள் தமிழகத்தை ஆள தகுதியற்றவர்கள் என்று தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் தரப்பிலிருந்தும் சமூக வலைத்தளங்களில் எதிர்பு தெரிவிக்கபட்டு வருகிறது.
அந்த வகையில் ரஜினியை விமர்சித்த சீமானைவிமர்சித்த காரணத்தினால் சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனி என்பவர் மீது நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானா அந்த நபர் ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்னை வெட்டினார்கள்”, என்று தலையில் வழியும் ரத்ததோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி பழனி. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மருத்துவனமாவில் அவர் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.