படத்தில் ஏன் இந்து மத அமைப்புகளை காட்டுவதில்லை- செய்தியாளர் கேள்விக்கு சீனு ராமசாமி கொடுத்த விளக்கம்

0
194
- Advertisement -

படத்தில் ஹிந்து மத அமைப்புகள் தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக சீனு ராமசாமி திகழ்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் 3 தேசிய விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை.

- Advertisement -

சீனு ராமசாமி இயக்கிய படம்:

இந்த படத்தில் ஏகன், யோகி பாபு, பிரகீடா, ஐஸ்வர்யா தாத்தா, பவா செல்லதுரை, மானசி கொட்டாச்சி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அருளானந்தன் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் படக்குழு:

இதை அடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் சீனு ராமசாமி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது சீனு ராமசாமி, இந்தப் படத்தை பார்த்து பத்திரிகையாளர்கள் வாழ்த்தியது எனக்கு ரொம்ப சந்தோசம். இந்த நாள் எனக்கு சிறப்பான நாளாக அமைந்தது. இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கு தமிழ் சினிமாவில் ஆள் இல்லை. நான் எடுத்த நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை பட வரிசையில் இந்த படமுமே கண்டிப்பாக இருக்கும்.

-விளம்பரம்-

செய்தியாளர் கேள்வி:

இந்த படத்தை பார்த்து பார்வையாளர்கள் மனநிறைவுடன் தான் வீட்டுக்கு போவார்கள் என்ற கூற, உடனே அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர், உங்க படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கிறிஸ்தவ அமைப்புகளை மட்டுமே காட்டி வருகிறீர்கள். இந்து மதத்திலும் அதுபோல அமைப்புகள் இருக்கிறது. ஏன் படத்தில் காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு சீனு ராமசாமி, படத்தினுடைய ஒரு காட்சியில் நான் காவி வேட்டி கட்டி உட்கார்ந்திருந்தேன். நீங்கள் பார்க்கவில்லையா? எங்க ஊரில் கிறிஸ்தவ அமைப்புகள் இருக்கிறார்கள்.

மதம் குறித்து சொன்னது:

நான் கிறிஸ்துவா, இந்துவா, முஸ்லிமா என்றெல்லாம் பார்க்கவில்லை. நான் சமூக நல்லிணக்கத்தை சொல்கிறேன். என்னுடைய படத்திலும் அதை தான் வலுயுறுத்தி வருகிறேன். நான் கடவுளை பிரார்த்தனையை குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால். எந்த மதத்தையும் குறிப்பிட்டது கிடையாது. நான் கடவுள் பிரார்த்தனைகள் இருப்பதை நம்புகிறேன். என்னுடைய மாமனிதன் படத்திலும் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரம் வரும். இதுபோலதான் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை சொல்லி வருகிறேன். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நான் காண்பித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement