அடுத்த படம் சூர்யா கூடதான் பண்ணனும்..! அடம்பிடிக்கும் பிரபல இயக்குனர்.! சூர்யா கிட்ட அப்படி என்ன ஸ்பெசல்..?

0
312
Surya-Actor

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா “என் ஜி கே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்,இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் சூர்யா முதன் முறையாக இந்த படத்தில் கைகோர்த்துள்ளனர். பொதுவாக நடிகர் சூர்யா நடிக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முழு அற்பணிப்பையும் செலுத்தி, தன்னால் முடிந்த கடின உழைப்பை செலுத்துவது அவரது சிறப்பான ஒரு குணமாகும்.

surya

இந்நிலையில் “என் ஜி கே ” படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும், அர்ப்பணிப்பையும் கண்டு இயக்குனர் செல்வராகவன் வியந்துள்ளாராம். இதுகுறித்து சமீபத்தில் செல்வராகவன் தெரிவிக்கையில் ‘இந்த அளவிற்கு கதாபாத்திரத்திற்காக தன்னை அர்பணித்துக்கொண்ட ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை. இவ்வளவு கடின உழைப்பை சூர்யாவால் மட்டுமே முடியும். நான் இயக்கிய நடிகர்களில் மீண்டும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றால் அது சூர்யாவாக தான் இருக்கும் ‘ என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு அரசியல் பிரமுகராக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை ஒரு அரசியல் கலந்த ஸ்வரசியமான கதையாக இயக்குனர் செல்வராகவன் எடுத்து வருகிறாராம். இந்த படத்தில் சூர்யாவின் பெயர் நந்த கோபாலன் குமார் (Nandha Gopalan Kumaran) அதனால் தான் இந்த படத்திற்கு என்.ஜி.கே(NGK ) என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NGK

இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படமும் ஒரு அரசியல் கலந்த படமாக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், விஜயின் சர்கார் படமும் சூர்யாவின் என் ஜி கே படமும் தீபாவளி அன்றுதான் வெளியாகவுள்ளது. இதனால் ஒரே கதை களத்தை கொண்ட இந்த இரு ஹீரோக்களின் படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.