ஒரு வருடம் இதை நீங்க செய்ய கூடாது, பாலா போட்ட கண்டிஷனை மீறியதால் ‘சேது’ பட வாய்ப்பை இழந்த செம்பருத்தி சீரியல் நடிகை.

0
718
shilpa
- Advertisement -

பொதுவாகவே நடிகர்கள் பலர் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் கிடைப்பதில்லை. ஆனால், அடையாளம் நபர்களும் சின்னத்திரை சீரியல்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் வெள்ளித்திரையில் கிடைக்காத அங்கீகாரத்தை சின்னத்திரை சீரியல்கள் மூலம் பெற்றவர் நடிகை சில்பா. இவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் தொகுப்பாளராக தான் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் சின்னத்திரை சீரியல் மூலம் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

-விளம்பரம்-
ஜோடி no.1ல் ஷில்பா

பெரும்பாலும் இவர் சீரியல்களில் வில்லி, போலீஸ் கதாபாத்திரத்தில் தான் மிரட்டியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஷில்பா பல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியிலும், சின்னத்திரையிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து கொண்டிருக்கும் செம்பருத்தி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தன்னுடைய திரைப் பயணம் குறித்து பல சுவாரசியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியது,

இதையும் பாருங்க : ‘பாகுபலி’ அளவிற்கு இருக்கிறதா ‘RRR’ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

சித்தி 2 சீரியல் விலகல் காரணம்:

கொரோனா தீவிரம் அதிகமானதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று தான் நான் சீரியலில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால், கொரோனாவிற்கு முன் பல தொடர்களில் கமிட்டாகி நடித்து இருந்தேன். பின் கொரோனா தொற்று அதிகமானதால் வந்த பல வாய்ப்புகளை தவறவிட்டேன். அதில் ஒன்று தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சித்தி 2. இந்த தொடரில் இருந்து விலகி இருந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் ரெண்டு வருஷமாக ஒரு சின்ன பிரேக் எடுத்து கொண்டேன். இந்த இரண்டு வருடமும் பொறாமை, ஈகோ எல்லாம் நமக்குத் தேவையே இல்லை, லைப் இஸ் நத்திங் என்பதை ரொம்ப நல்லா தெளிவா எனக்கு புரிய வைத்தது.

சேது பட வாய்ப்பு மிஸ் ஆக காரணம்:

நான் சின்னத்திரையில் வருவதற்கு முன்பு வெள்ளித்திரையில் கூட பல படங்களில் நடித்திருக்கிறேன். அந்த வகையில் நான் சூப்பர் ஹிட் கொடுத்த பல படங்களை மிஸ் பண்ணி இருக்கிறேன். அதில் ஒன்று தான் விக்ரம் சார் உடைய சேது படம். பாலா சார் என்னை தாவணி கட்டிட்டு வந்து சந்திக்க சொன்னார். மேலும், ஆடிசன் முடிந்து பத்து நாள் கழித்து நீங்கள் என் படத்தில் இருக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் வரைக்கும் கூட ஆகலாம். ஆனால், அதுவரைக்கும் நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்று சொன்னார். அப்ப சீரியலில் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பல தொடர்களில் நடித்தேன். அதனால் சேது படத்தை மிஸ் பண்ணிட்டேன். ஆனால், அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று பீல் பண்ணதே இல்லை. ஏன்னா, நான் சீரியலில் வெரைட்டியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து கொண்டே இருந்ததால் சேது படத்தை மிஸ் பண்ணி விட்டேன் என்ற கவலையும் பீலிங்கும் ஏற்படவில்லை.

-விளம்பரம்-

ஷில்பா திருமணம் பற்றிய தகவல்:

பல பேருக்கு எனக்கு திருமணம் ஆனதா? என்று கூட தெரியாது. எனக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் என்னுடைய திருமணத்தை பற்றி இதுவரை யாரிடமும் பேசியதும் இல்லை. எனக்கு கல்யாணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து ஆகிவிட்டது. இப்ப நான் சிங்கிளாக சந்தோஷமா தான் இருக்கிறேன்.

சீரியலில் போலீஸ் ரோலில் நடித்த அனுபவம்:

சீரியலில் நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். சித்தி சீரியலில் பிருந்தா என்ற கதாபாத்திரத்திற்கு முதன் முறையாக போலீஸ் கெட்டப் போட்டேன். அது செம பாசிட்டிவ் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து பல சீரியல்களில் இருந்து எனக்கு போலீஸ் கதாபாத்திரம் வந்தது. பலரும் என்னை சின்னத்திரை விஜயசாந்தி என்றும் சொன்னார்கள். அந்த அளவுக்கு அதிகமாக காக்கி யூனிபார்மில் செட்டில் இருந்தேன்.

ஷில்பாவிற்கு பிடித்த நடிகர்:

எனக்கு சல்மான்கான் என்றால் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை எங்க செட்டுக்கு பக்கத்தில் தான் அவருடைய படத்துக்கான சூட்டிங் நடந்தது. அவர் என்னை பார்க்க நான் அவரை பார்க்க ஒரே ஜாலியாக இருந்தது. எனக்காக அவர் .ஒரு பேப்பரில் லெட்டர் மாதிரி பெருசா எழுதி அவருடைய கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதெல்லாம் வேற பீலிங்கா இருந்தது. இன்னும் என்னால் அதை மறக்க முடியாது என்று பல விஷயங்களை ஷில்பா பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement