‘பாகுபலி’ அளவிற்கு இருக்கிறதா ‘RRR’ – முழு விமர்சனம் இதோ.

0
908
RRR
- Advertisement -

இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ஆகவே இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

காட்டை சுற்றி பார்க்க வெள்ளைக்கார துறை, அவருடைய மனைவியும் வருகிறர்கள். அங்கு அவர்கள் மல்லி எனும் காட்டுவாசி பெண் குழந்தையை தங்களுடன் அழைத்து சென்று விடுகின்றனர். இதனைக் கேள்விப் படும் ஜூனியர் என்டிஆர்(பீம்) மல்லியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர டெல்லிக்கு அக்தர் என பெயரை மாற்றிக் கொண்டு செல்கிறார். மற்றொருபுறம் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு விரட்டி அடிக்கவும், தனது அண்ணனுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவும் வெள்ளைக்காரர்கள் இடம் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்(ராம்). பின் டெல்லிக்கு அக்பர் எனும் பெயரில் வரும் பீம், ராமை சந்திக்கிறார்.

இதையும் பாருங்க : பெண்களை டாஸ்க்கின் போது முரட்டுத்தனமாக தாக்கும் பாலாஜி – வைரலாகும் வீடியோ. தட்டிக்கேட்பாரா சிம்பு ?

- Advertisement -

மேலும், இருவரும் எதிர்பாராத சந்திப்பில் இருந்து நெருங்கிய நண்பர்களாக மாறுகிறார்கள். அதே சமயம் பீமை பிடித்து வேலைக்காரர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பில் நியமனம் செய்யப்படுகிறார் ராம். தன்னுடைய நண்பன் அக்தர் தான் பீம் என்று தெரியாமல் ஊரெல்லாம் தேடி அலைகிறார் ராம் சரண். ஒரு கட்டத்தில் இத்தனை நாட்கள் நண்பன் என்று எண்ணிய அக்தர் தான் அந்த பீம் என்று தெரிந்து கொள்கிறார் ராம். உடனே ராம், பீமை கைது செய்து சிறையில் அடைக்கிறார். மேலும், தன்னுடைய நண்பனே தனக்கு துரோகம் செய்துவிட்டதாக எண்ணி ராம் சரண் மீது பீம் கோபம் கொள்கிறார்.

ஆனால், பீமின் புரட்சியை பார்க்கும் ராம் தனது அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இலட்சியத்தையும் கைவிட்டு பிறருக்கு உதவி செய்து வெள்ளைக்காரர்கள் இடம் கைதியாக மாட்டிக்கொள்கிறார்கள். இறுதியாக பீம் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் பீம் , ராமை காப்பாற்ற வந்தாரா? இல்லையா? ராம்சரன் லட்சியம் என்ன ஆனது? அந்த குழந்தையை ஜூனியர் என்டிஆர் காப்பாற்றிக் கொண்டு வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் என்ற கதாபத்திரத்தில் ராம் சரண் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

படத்தில் இருவருடைய நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. குறிப்பாக சண்டை, நடனம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் இருவருமே ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து அஜய் தேவ்கான்,அலியா பட் இருவரும் தங்களது கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். பின் சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரேயா படத்தில் வந்ததே யாருக்குமே தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர்களுடைய காட்சி படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. வில்லனாக வரும் Ray Stevenson மற்றும் Alison Doody ஆகிய இருவரின் நடிப்பும் ஓகே என்று தான் சொல்லணும். Olivia Morris தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு எந்த கதாபாத்திரங்களும் இல்லை. மேலும், VFX காட்சிகளை தத்ரூபமாக அமைத்ததற்கு இயக்குனர் ராஜமௌலிக்கு முதலில் கிளாப்ஸ் கொடுக்கனும். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து பிரம்மாண்டமாக செதுக்கியுள்ளார் ராஜமவுலி. ஆனால், அவர் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தில் பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்தில் பார்வையாளர்களுக்கு சழிப்படைய செய்து இருக்கிறது.

மேலும், கே.வி. விஜயேந்திர பிரசாந்தின் கதையும், சாய் மாதேவின் வசனங்களும் படத்திற்கு பலமாக உள்ளது. அதேபோல் செந்தில் குமாரின் ஒளிப்பதிவுக்கு ஒரு தனி அப்ளாஸ் கொடுத்திருக்கிறது. இவர்களுடன் எடிட்டிங்கும், பின்னணி இசையும் படத்திற்கு ஒரு கூடுதல் பலமே. நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆரின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காசு கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் சென்று பார்க்கும் படமாக RRR உள்ளது என்று தான் சொல்லலாம்.

நிறைகள் : :

VFX காட்சிகள் அற்புதம்.

படத்தின் ஆக்ஷன் கட்சிகளும், படத்தின் மெய் சிலிர்க்கும் கட்சிகளும்

இயக்கம், கதை கொண்டு சென்ற விதம் சூப்பர்.

படத்திற்கு பக்கபலமாக ஒளிப்பதிவு, இசை அமைந்துள்ளது.

ராம்சரன், ஜூனியர் என்டிஆரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது.

குறைகள் : :

இரண்டாம் பாதி திரைக்கதை தொய்வு.

படத்தின் நீளம்

இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆங்காங்கே சில இடங்களில் சலிப்படைய செய்திருக்கிறது.

மொத்தத்தில் எஸ்எஸ் ராஜமவுலியின் RRR – (R) ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

Advertisement