கார்த்தி, ராணியை தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் இருந்து இவரும் போறாரா ? இவர் போனா அவ்ளோதா.

0
2871
sembaruthi
- Advertisement -

வெள்ளித்திரை படங்களைவிட சின்னத்திரை சீரியல்கள் தமிழக மக்கள் மனதில் மிக நெருக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. மக்களின் அன்றாட பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனல் டிஆர்பி ரேட்டிங்காக பல தொடர்களை ஒளிபரப்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தான். இந்த சீரியல் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் டிஆர்பி பெற்றுவருகிறது.

-விளம்பரம்-
Sembaruthi #Serial #Priya #Raman Sembaruthi serial actress hot images and  Navel | Film producer, Malayalam actress, Actresses

2017 ஆம் ஆண்டு இந்த சீரியல் வெளிவந்தது. இந்த சீரியலில் ஆதித்யா கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜா நடித்தார். தற்போது அக்னி நடித்து வருகிறார். பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியாராமன் சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் ராஜ் விலகியதும் இந்த சீரியல் கொஞ்சம் பின்தங்கி இருந்தது. இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த பிரியா ராமனும் விலகிவிட்டார் சீரியல் நிலைமை சற்று யோசிக்க வேண்டியது தான்.

இதையும் பாருங்க : ‘உங்க கன்னித்தன்மையை எப்போ இழந்தீங்க – கன்றாவி கேள்விக்கு இலியான சொன்ன பதில்.

- Advertisement -

மேலும், பிரியாராமன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் துரை சிங்கத்தின் முதல் மனைவி இறந்து போன அருணா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரியராமன் கணவன் ரஞ்சித் இந்த சீரியலில் துரைசிங்கம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு கதாபாத்திரமாக இருந்த அருணாவின் கதாபாத்திரத்தை தற்போது பேயாக கொண்டு வந்துள்ளார்கள். அதனால் தான் செம்பருத்தி சீரியல் இருந்து விலகி செந்தூரப்பூவே சீரியலில் பிரியாராமன் நடிப்பார் என்று சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

This image has an empty alt attribute; its file name is 1-246.jpg

உண்மையிலேயே செம்பருத்தி சீரியலில் பிரியாராமன் விலகி விட்டாரா! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராணி மாற்றப்பட்டு இருந்தார். அவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை உஷா எலிசபெத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ச்சியாக செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர்க மாற்றப்பட்டு வருவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement